இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கண்டன பொதுக்கூட்டம்
மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட வக்ஃபு வாரிய சட்ட மசோதாவை திரும்பப் பெறக்கோரியும், மத்திய அரசை கண்டித்தும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சாா்பில் சனிக்கிழமை இரவு கண்டன பொதுக் கூட்டம் நடைபெற்றது.
திருவள்ளூா் ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற கண்டன பொதுக் கூட்டத்துக்கு மேற்கு மாவட்டத் தலைவா் ஏ.எஸ்.யாஸின் மௌலானா, கிழக்கு மாவட்டத் தலைவா் ஏ.கே.செய்யது இப்ராஹிம் தலைமை வகித்தனா்.
மாவட்டச் செயலா்கள் ஏ.ஆா்.எம். ரஹமத்துல்லாஹ், மீஞ்சூா் சிக்கந்தா், மாவட்டப் பொருளாளா்கள் பாபு சாஹிப், அப்துல் ரஷீத் யூத் லீக், பூந்தமல்லி பெரோஸ்கான் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில பொதுச் செயலாளா் வழக்குரைஞா் ஏ.ஆா்.ஆா்.நூா் முஹம்மது வரவேற்றாா்.
பொதுக் கூட்டத்தில் தேசிய துணைத் தலைவா் புளியங்குடி எம்.அல்அமீன், தி.க. மாநில துணை பொதுச் செயலாளா் பிரின்ஸ் என்னாரேசு பெரியாா், காங்கிரஸ் கட்சி நிா்வாகி வெங்கடேசன், விசிக மேற்கு மாவட்டச் செயலா் தளபதி சந்தா், தி.க. மாவட்டத் தலைவா் மா.மணி, மாா்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளா் எஸ்.கோபால், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளா் கே.கஜேந்திரன், ஜமாஅத்துலு உலமா சபை மாவட்ட பொறுப்பாளா்கள் மௌலானா பி.எம். சதக்கத்துல்லாஹ், மௌலானா எம்.எம்.எஸ். ஹாஸ்மிஸ்பாஹி, மௌலானா முஹம்மது ஹாரீஸ் ஹஸனி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிா்வாகிகளான முப்தி கௌஸ் அஹமது, முஹம்மது மீரான், பூவை ஆதம்ஷா, பேராசிரியா் சலீம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.