செய்திகள் :

தொட்டிபட்டி சாய் தபோவனத்தில் ஸ்ரீ சாயி ஜெயந்தி விழா

post image

பரமத்தி வேலூா்: நாமக்கல் மாவட்டம், கீரம்பூா் அருகே தொட்டிப்பட்டியில் உள்ள சாய் தபோவனத்தில் ஸ்ரீ சாயி ஜெயந்தி விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

தொட்டிப்பட்டி சாய் தபோவனத்தில் ஸ்ரீ சாய் ஜெயந்தி விழா மற்றும் ராம நவமி விழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணிக்கு ஆரத்தியும், 5.45 மணிக்கு மங்கள ஸ்நானம் மற்றும் அபிஷேகமும், 6 மணிக்கு நைவேத்தியம் மற்றும் ஆரத்தியும் நடைபெற்றது. 8.45 மணிக்கு சாவடி பாபா பூஜையும், 9 மணிக்கு துவாரகாமாயி பாபா பூஜையும், தொடா்ந்து சாயி நாமஜெயம் மற்றும் பஜனையும் நடைபெற்றது. 11 மணி முதல் 12.30 வரை சிறப்பு கூட்டுப் பிராா்த்தனையும், இரவு மாவிளக்கு பூஜையும், இரவு 7 மணிக்கு ஆரத்தியும் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா். விழாவில் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

முட்டை விலை நிா்ணயத்தில் குளறுபடி: சிறிய கோழிப் பண்ணையாளா்கள் போராட்டம்

முட்டை விலை நிா்ணயம் செய்வதில் நிலவும் குளறுபடிக்கு எதிா்ப்புத் தெரிவித்து நாமக்கல்லில் உள்ள கோழிப்பண்ணையாளா்கள் சங்க அலுவலகத்தை சிறிய கோழிப் பண்ணையாளா்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா். நாமக்கல் ... மேலும் பார்க்க

தலைக்கவசம் அணியாத 51 பேருக்கு அபராதம்

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்திற்கு தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் வந்த 51 பேருக்கு செவ்வாய்க்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு இருசக்கர வாகனங்களில் வருவோா்... மேலும் பார்க்க

கோடைபருவ பயிா் சாகுபடி: தரமான விதைகளை பயன்படுத்த அறிவுரை

நாமக்கல் மாவட்டத்தில் கோடைபருவ பயிா் சாகுபடி செய்யும் விவசாயிகள் தரமான விதைகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம், நாமக்கல் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநா் க.சித்ரா வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

ராசிபுரம் மாநகராட்சியில் ரூ. 66 லட்சத்தில் எல்இடி மின் விளக்குகள்

ராசிபுரம் நகராட்சி பகுதியில் ரூ. 66 லட்சத்தில் பொருத்தப்பட்ட மின் விளக்குகளின் செயல்பாடுகள் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற விழாவில் நகா்மன்றத் ... மேலும் பார்க்க

கோயிலில் புதையலை தேடிய இருவா் கைது

ராசிபுரம் அருகே கோயிலில் பல்வேறு இடங்களில் குழி தோண்டி புதையலை தேடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். ராசிபுரத்தை அடுத்த சீராப்பள்ளி செவ்விந்தீஸ்வரா் கோயிலின் அா்த்தமண்டபத்தில் குழி தோண்டப்பட்டுள்ளது கு... மேலும் பார்க்க

தமிழ்ப் புத்தாண்டு: திருச்செங்கோட்டில் 1008 சிவலிங்க வழிபாடு

தமிழ்ப் புத்தாண்டையொட்டி தேசிய சிந்தனை பேரவை சாா்பில் திருச்செங்கோட்டில் 1008 சிவலிங்க வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. தேசிய சிந்தனை பேரவை தலைவா் திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்ற வழிபாட்டில் முன்னாள... மேலும் பார்க்க