சட்டவிரோதமாக குடியேறிய 2 குழந்தைகள் உள்பட 11 வங்கதேசத்தினர் கைது!
தொன்மக் கதையை இயக்கும் ராஜமௌலி?
இயக்குநர் ராஜமௌலி - மகேஷ் பாபு படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்ஆர்ஆர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின் இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி நடிகர் மகேஷ் பாபுவை நாயகனாக வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஒடிஷாவில் துவங்கியுள்ளதாகவும் இதில் நடிகர்கள் மகேஷ் பாபு மற்றும் பிருத்விராஜ் இணைந்து நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: வயதான நடிகைகளுக்கு வாய்ப்பு வழங்கும் ஓடிடி: ஜோதிகா
இந்த நிலையில், இப்படம் காசியின் வரலாற்றைப் பேசும் தொன்மக் கதையாக உருவாகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்காக, ஹைதராபாத்தில் காசி கோவிலைப் போன்ற செட்கள் அமைக்கப்பட்டு வருகிறதாம். முதல்கட்ட படிப்பிடிப்பு முடிந்ததும் படக்குழு தென் ஆப்ரிக்கா செல்ல உள்ளதாகவும் தகவல்.