செய்திகள் :

தொலைக்காட்சியிலும் வெளியாகும் மாமன்!

post image

மாமன் திரைப்படம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் எழுத்து இயக்கத்தில், சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படமாக வெளியான படம் மாமன்.

இந்தப் படத்தில், சூரி, ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் ஸ்வாசிகா என முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். மேலும் லட்டுவாக குழந்தை நட்சத்திரம் பிரகீத் சிவன் கலக்கியுள்ளார்.

மே மாதம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம், கடந்த வெள்ளிக்கிழமை ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது.

இந்த நிலையில், சுதந்திர நாளை முன்னிட்டு வரும் ஆக. 15 ஆம் தேதி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிற்பகல் 3.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மோனிகா பாடலுக்காக மோனிகா பெலூச்சி கூறியதென்ன? பூஜா ஹெக்டே பெருமிதம்!

கூலி படத்தில் பிரபலமான மோனிகா பாடல் நடிகை மோனிகா பெல்லுச்சிக்கு பிடித்துள்ளதாக பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படத்தில் பான் இந்திய நடி... மேலும் பார்க்க

கூலி பட சிறப்புக் காட்சிக்கு அனுமதி!

கூலி திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி, ஒரு நாளுக்கு 5 காட்சிகளைத் திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

கூலி ரிலீஸ்... ராமேஸ்வரத்தில் புனித நீராடி வழிபட்ட லோகேஷ் கனகராஜ்!

கூலி திரைப்படம் நாளைமறுநாள் (ஆக. 14) வெளியாகவுள்ள நிலையில், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் புனித நீராடி சாமி தரிசனம் செய்தார்.கூலி திரைப்படத்துக்கான புரமோஷன் பணிகள் முடிந்த... மேலும் பார்க்க

குரல்வளை புற்றுநோயின் ஆரம்ப நிலையை செய்யறிவு(ஏஐ) கண்டறியும்: ஆய்வில் தகவல்

ஒருவரின் குரல் பதிவைக் கொண்டு குரல்வளை புற்றுநோய் ஆரம்ப நிலையை செய்யறிவு(ஏஐ) தொழில்நுட்பம் கண்டறியும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். செய்யறிவு அல்லது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்(ஏஐ) யாரும் எதிர்பாரா... மேலும் பார்க்க

மகாபாரதப் பணிகளைத் துவங்கும் ஆமிர் கான்!

நடிகர் ஆமிர் கான் மகாபாரதத்தை திரைப்படமாக்கும் திட்டத்தைத் துவங்கவுள்ளார். பாலிவுட்டின் நட்சத்திர நடிகரான ஆமிர் கான் கடந்த சில ஆண்டுகளாகவே மார்க்கெட் இழந்த நடிகராக இருக்கிறார். காரணம், லால் சிங் சத்தா... மேலும் பார்க்க