குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர்: ஆக. 18-ல் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை
மோனிகா பாடலுக்காக மோனிகா பெலூச்சி கூறியதென்ன? பூஜா ஹெக்டே பெருமிதம்!
கூலி படத்தில் பிரபலமான மோனிகா பாடல் நடிகை மோனிகா பெல்லுச்சிக்கு பிடித்துள்ளதாக பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படத்தில் பான் இந்திய நடிகர்கள் நடித்துள்ளதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இந்தப் படத்தில், பிரபல இத்தாலி நடிகை மோனிகா பெலூச்சி நினைவாக ’மோனிகா’ எனும் பாடலை லோகேஷ் கனகராஜ் அமைத்துள்ளார்.
இந்தப் பாடலுக்கு அனிருத் இசையில் பூஜா ஹெக்டே நடனமாடியது லிரிக்கல் விடியோ வெளியாகி மிகப்பெரிய வைரலானது.
எனக்கு கிடைத்ததிலேயே மிகப்பெரிய பாராட்டு
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் இது குறித்து பூஜா ஹெக்டே பேசியதாவது:
மராகேஷ் சர்வதேச திரைப்பட விழாவின் தலைமை நிர்வாகி மெலிடா டோஸ்கன் கூலி படத்தில்வரும் மோனிகா பாடலை மோனிகா பெலூச்சியிடம் காண்பித்துள்ளார்.
பெலூச்சிக்கு இந்தப் பாடல் மிகவும் பிடித்ததாம். இந்தத் தகவல் கிடைத்ததும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது.
எனக்கு கிடைத்ததிலேயே மிகப்பெரிய பாராட்டு என்றால் அது இதுதான். எனக்கு மோனிகா பெலூச்சியை மிகவும் பிடிக்கும்.
தனித்துவமானவர் மோனிகா பெலூச்சி
தனக்கே உரிய தனித்துவமான விதத்தில் அவர் ஒரு அடையாளமாக இருக்கிறார். அவர் பெரிதாக எதையும் மெனக்கெட்டுச் செய்ய வேண்டியதில்லை. அவருக்கென பிரத்யேகமான குரல், ஸ்டைல் இருக்கிறது.
அவருக்கு மோனிகா பாடல் பிடித்தது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
பல தமிழ் ரசிகர்கள் மோனிகா பெலூச்சியின் இன்ஸ்டா பக்கத்தில் கூலி பாடலைப் பார்க்குமாறு கமெண்ட் செய்து வருகிறார்கள் என்றார்.
கூலி திரைப்படம் வரும் ஆக.14ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
அரபிக் குத்து, கனிமா பாடலை விட மோனிகா பாடலுக்காக அதிக உழைத்ததாக பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருந்ததும் கவனிக்கத்தக்கது.
இந்தப் பாடல் யூடியூப்பில் இதுவரை தமிழில் மட்டுமே 6.8 கோடி (68 மில்லியன்) பார்வைகளைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.