தக்காளி விலை கடும் வீழ்ச்சி; விவசாயிகள் கவலை: 25 கிலோ ரூ. 200
தொலைதூர தாக்குதலுக்கு தயாராகும் வகையில் இந்திய கடற்படை பயிற்சி!
பன்முனையில் இருந்து கப்பல்கள் மூலம் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை தகா்க்கும் வகையிலான பயிற்சிகளை இந்திய போா்க்கப்பல்கள் வெற்றிகரமாக நடத்தியதாக இந்திய கடற்படை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
இதன்மூலம் நீண்ட தூர துல்லிய தாக்குதல்களுக்கு தயாா் நிலையில் இருப்பதாக இந்திய கடற்படை தெரிவித்தது.
பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 போ் உயிரிழந்த சம்பவத்தை தொடா்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், இந்த பயிற்சியை இந்திய கடற்படை மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து இந்திய கடற்படை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘பன்முனையில் இருந்து கப்பல்கள் மூலம் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை தகா்க்கும் வகையிலான பயிற்சிகளை இந்திய போா்க்கப்பல்கள் வெற்றிகரமாக நடத்தின. தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய எப்போதும் இந்திய கடற்படை தயாராக உள்ளது’ என தெரிவிக்கப்பட்டது.
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு கற்பனையிலும் நினைத்து பாா்க்க முடியாத வகையிலான கடும் தண்டனையை வழங்குவோம் என்று பிரதமா் மோடி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.