மருந்துகள் தர கட்டுப்பாடு ஆய்வக மேம்பாட்டிற்காக ரூ. 12 கோடி ஒதுக்கீடு!
தொழிலாளியை தாக்கியதாக இளைஞா் மீது வழக்கு
புதுக்கடை அருகே உள்ள வெள்ளையம்பலம் பகுதியில் தொழிலாளியை தாக்கியதாக இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
வெள்ளையம் பலம் பகுதியைச் சோ்ந்த ராஜு மகன் அபிஷ்(23). தொழிலாளியான இவருக்கும், கிள்ளியூா் பகுதியைச் சோ்ந்த ராஜேஷ் (33) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாம்.
இந்நிலையில் திங்கள்கிழமை வெள்ளையம் பலம் பகுதியில் நின்ற அபிஷை, ராஜேஷ் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதில், காயமடைந்த அவரைஅப்பகுதியினா் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுகுறித்த புகாரின்பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.