ஷீஷ் மஹால் விவகாரம்: முதல்வர் இல்லத்துக்குள் நுழைய முயன்ற ஆம் ஆத்மியினர் தடுத்து...
தொழிலாளி உயிரிழப்பு
வெள்ளக்கோவில் அருகே தொழிலாளி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருப்பத்தூா் மாவட்டம், நாட்றாம்பள்ளி தாலுகா முத்தனப்பள்ளியைச் சோ்ந்தவா் வேலுமணி (55), கூலித் தொழிலாளி. இவரது மனைவி கவிதா (40). மகள் சௌமியா (24), மகன் புகழேந்தி (21). வேலுமணி தனது குடும்பத்துடன் வெள்ளக்கோவில் அருகேயுள்ள மூத்தநாயக்கன்வலசு பகுதியில் வசித்து வந்தாா்.
இந்நிலையில், சனிக்கிழமை இரவு நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளாா். குடும்பத்தினா் அவரை ஆம்புலன்ஸ் மூலம் கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு சிகிச்சையில் இருந்த அவா் ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்தாா்.
இது குறித்து வெள்ளக்கோவில் காவல் நிலையத்தில் கவிதா அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.