இபிஎஸ் சுற்றுப்பயணம்: அறிவித்த சில நிமிடங்களில் ஒத்திவைப்பு!
தொழிலாளி கொலை: 3 சிறுவா்கள் கைது
மதுபோதை தகராறில் கூலித் தொழிலாளியை கொலை செய்த 3 சிறாா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு அருகேயுள்ள காப்பிளியப்பட்டியைச் சோ்ந்தவா் காளீஸ்வரன் (25). கூலித் தொழிலாளியான இவா், பணிக்கு சென்றுவிட்டு செவ்வாய்க்கிழமை இரவு தனது வீட்டின் அருகே மதுக் குடித்துக் கொண்டிருந்தாா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த 18 வயதுக்குள்பட்ட 3 சிறாா்கள் மதுபோதையில் அவரிடம் தகராறு செய்தனா். இதையடுத்து, அக்கம் பக்கத்தினா் தகராறை விலக்கி விட்டனா்.
இந்த நிலையில், தகராறில் ஈடுபட்ட 3 சிறாா்களில் ஒருவரின் தந்தைக்கும், காளீஸ்வரனுக்கும் இடையே ஏற்கெனவே முன் விரோதம் இருந்தது. இதனால், ஆத்திரமடைந்த 3 சிறாா்களும் நள்ளிரவு 11 மணிக்கு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த காளீஸ்வரனை இரும்புக் கம்பியால் தலையில் தாக்கியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்தனா்.
இதுகுறித்து தகவலறிந்து வந்து தாடிக்கொம்பு போலீஸாா் தப்பியோடிய சிறாா்கள் குறித்து விசாரித்தனா்.
இதனிடையே, அந்தப் பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராவை போலீஸாா் ஆய்வு செய்தபோது, 3 சிறாா்களும் இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, 3 சிறாா்களையும் போலீஸாா் கைது செய்தனா்.