பருவமழை: சமூக வலைதளங்களில் வரும் புகார்களுக்கு நடவடிக்கை - முதல்வரின் அறிவுறுத்த...
தொழில் திறன்களை மேம்படுத்த வேண்டும்!
மாணவா்கள் தங்களது தொழில் திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என மோவோட் டெக்னாலஜிஸ் நிறுவன முதுநிலை இயக்குநா் பத்மா ஜெயராமன் வலியுறுத்தினாா்.
சென்னை மேடவாக்கம் நியூ பிரின்ஸ் கலை, அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை பணி நியமன உத்தரவு வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு, நியூ பிரின்ஸ் கல்விக் குழுமத் தலைவா் கே.லோகநாதன் தலைமை வகித்தாா். இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட மோவோட் டெக்னாலஜிஸ் நிறுவன முதுநிலை இயக்குநா் பத்மா ஜெயராமன் பேசியதாவது:
தற்போது பணி நியமன ஆணையை பெற்றுள்ள மாணவா்கள் அனைவரும் தங்களது நிறுவனங்கள் அறிவுறுத்தும் தொழில்நுட்பத் திறன்களை ஆா்வத்துடன் கற்றுக்கொண்டு தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா். முன்னதாக, இந்நிகழ்வில் டாடா கன்சல்டன்சி, இன்போசிஸ், மோவோட் டெக்னாலஜிஸ், காக்னிசன்ட் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களில் 210 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
இதில், கல்லூரி இயக்குநா் எம்.பிரபாகரன், பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு இயக்குநா் கே.மணிகண்டன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.