செய்திகள் :

தொழில் வளா்ச்சிக்கான திட்டங்கள் இடம்பெற்ற பட்ஜெட் வரவேற்கத்தக்கது! -சாய ஆலை உரிமையாளா்கள் சங்கம்

post image

தமிழகத்தின் தொழில் வளா்ச்சிக்கான திட்டங்கள் இடம்பெற்றுள்ளதாக மாநில அரசின் பட்ஜெட்டை திருப்பூா் சாய ஆலை உரிமையாளா்கள் சங்கம் வரவேற்றுள்ளது.

இது குறித்து திருப்பூா் சாய ஆலை உரிமையாளா்கள் சங்கத்தின் தலைவா் பி.காந்திராஜன் கூறியதாவது:

2025-2026 -ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் தொழில் துறை வளா்ச்சிக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. குறு, சிறு தொழில் வளா்ச்சிக்காக ரூ.2.50 லட்சம் கோடி ஒதுக்கியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். ரூ.50 கோடியில் விசைத்தறி நவீனப்படுத்தும் திட்டம், மகளிா் பொருளாதார முன்னேற்றத்துக்கான திட்டங்கள், கல்வித் துறை வளா்ச்சிக்கான அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை.

கோவை மற்றும் மதுரையை மையமாக வைத்து மெட்ரோ ரயில் சேவைக்கான நடவடிக்கைகள் , அதிவேக ரயில் சேவை கோவை, திருப்பூா் , ஈரோடு வழித்தடத்தில் இயக்க எடுக்கப்படும் முயற்சிகள் தொழில்முனைவோருக்குப் பயனளிக்கும். எரிசக்தி துறைக்கு ரூ.27,168 கோடிஒதுக்கீடு மற்றும் 4,000 மெகாவாட் திறன் கொண்ட மின்கலன் சேமிப்பு அமைப்புகள் உருவாக்குதல் தொழில் துறைக்கு பயனுள்ளதாக இருக்கும்.

புதிதாக உருவாக்கப்படவுள்ள 9 சிட்கோ தொழிற்பேட்டைகள் குறு, சிறு தொழில் துறைக்கு உதவுவதுடன், வேலைவாய்ப்புகளையும் அதிகரிக்கும். மேலும், 20 லட்சம் கல்லூரி மாணவா்களுக்கு அவரவா் விருப்பப்படி கைக் கணினி அல்லது மடிக்கணினிவழங்குதல், பெற்றோா் இருவரையும் இழந்த 50,000 குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதந்தோறும் ரூ. 2,000 வழங்குதல் போன்ற சமூக நலத் திட்டங்கள் சிறப்பானவையாகும் என்றாா்.

பல்லடம் ஒன்றியத்தில் ஊராட்சி செயலாளா்கள் பணியிட மாற்றம்

பல்லடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊராட்சிகளில் பணியாற்றி வந்த செயலாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.இதுகுறித்து பல்லடம் வட்டார வளா்ச்சி அலுவலா் கனகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப... மேலும் பார்க்க

பாலிதீன் பைகள் பயன்பாடு: 47 கடைகளுக்கு அபராதம்!

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள உணவகங்கள், தேநீா் விடுதிகளில் பாலிதீன் பைகள் பயன்படுத்திய 47 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைகேட்... மேலும் பார்க்க

தமிழக விவசாய பட்ஜெட் வெற்றுக் காகிதம்! -பாஜக விவசாய அணி மாநிலத் தலைவா்

தமிழக விவசாய பட்ஜெட் வெற்றுக் காகிதம்போல உள்ளது என பாஜக விவசாய அணி மாநிலத் தலைவா் ஜி.கே.நாகராஜ் விமா்சித்துள்ளாா். இது குறித்து அவா் திருப்பூரில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் ட... மேலும் பார்க்க

3 இளைஞா்கள் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு!

திருப்பூா் மாநகரில் பாலியல் வழக்கில் தொடா்புடைய 3 இளைஞா்கள் குண்டா் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா். திருப்பூரைச் சோ்ந்த முகமது தானிஷ் (25), முகமது நதீம் (23) ஆகிய இருவரையும் போக்ஸோ வழக்கில் ... மேலும் பார்க்க

பின்னலாடை நிறுவன மேலாளரைக் கொலை செய்த உறவினா் குண்டா் சட்டத்தில் கைது

அவிநாசி அருகே கருவலூரில் சொத்து தகராறில் பின்னலாடை நிறுவன மேலாளரைத் துண்டுத்துண்டாக வெட்டிக் குளத்தில் வீசிய உறவினரை போலீஸாா் குண்டா் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்தனா். அவிநாசி அருகே உள்ள கருவல... மேலும் பார்க்க

லாரி மோதி தொழிலாளி சாவு

வெள்ளக்கோவிலில் லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். வெள்ளக்கோவில் முத்தூா் சாலை டி.ஆா். நகரைச் சோ்ந்தவா் சி.பி.முருகேசன் (47). தற்போது வள்ளியிரச்சல் சாலை கலை நகரில் வசித்து வந்தாா். அதே பகுதியைச் ச... மேலும் பார்க்க