செய்திகள் :

தோட்டாக்களுடன் துப்பாக்கிகள் வைத்திருந்ததாக திமுக நகர மன்ற உறுப்பினர் உள்ளிட்ட இருவர் கைது!

post image

அரக்கோணம்: தோட்டாக்களுடன் இரண்டு துப்பாக்கிகள் வைத்திருந்ததாக திமுகவைச் சேர்ந்த அரக்கோணம் நகரமன்ற உறுப்பினர் உள்ளிட்ட இருவரை போலீஸார் கைது செய்து அவர்களிடமிருந்து இரண்டு துப்பாக்கிகள், 4 தோட்டாக்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

அரக்கோணம் நகர காவல் நிலைய போலீஸார் அரக்கோணத்தை அடுத்துள்ள மங்கம்மா பேட்டையில் உள்ள ரயில்வே மேம்பாலம் அருகே இன்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் ஒருவரிடம் இரு துப்பாக்கிகளும் 4 தோட்டாக்களும் இருந்தது தெரிய வந்தது. உடனே வாகனங்களுடன் துப்பாக்கிகள் தோட்டாக்களை பறிமுதல் செய்த போலீஸார் இருவரையும் கைது செய்தனர். அவர்கள் அரக்கோணம் நேருஜி நகரை சேர்ந்த கே.எம். பாபு(37) மற்றொருவர் அரக்கோணம் ஜோதி நகரைச் சேர்ந்த திணேஷ் குமார்(32) என்பது தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட கே எம் பாபு, அரக்கோணம் நகர மன்ற ஆறாவது வார்டு உறுப்பினராக திமுக சார்பில் தேர்வு செய்யப்பட்டு, தற்போது அப் பதவியில் இருந்து வருகிறார். இவர்களிடமிருந்து ஒரு ஏர்கன், ஒரு ரிவால்வர் இரு துப்பாக்கிகளும் மற்றும் 4 தோட்டாக்களும் அவர்கள் வந்த இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பாபு போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் தனக்கு தினேஷ்குமார் ரூ.30 ஆயிரத்திற்கு ஒரு ஏர்கன் ஒரு ரிவால்வர் ஆகியவற்றை வாங்கிக் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிகளை கொடுக்கும் போது தனக்கு 4 தோட்டாக்களையும் கொடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் போலீசார் தினேஷ் குமாரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற நிலையில், இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 17ஆம் தேதி அரக்கோணம் பழைய பேருந்து நிலையத்தில், நகர மன்ற உறுப்பினர் கே எம் பாபுவை 4 பேர் கத்தியால் வெட்டியதும், இச்சம்பவத்தில் கே எம் பாபு அவரின் தந்தையார் மணி உள்ளிட்ட 4 பேர் படுகாயம் அடைந்ததும், இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: அப்பல்லோ மைக்ரோ சிஸ்டம்ஸ் நிகர லாபம் 8% அதிகரிப்பு!

மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்கத் தொடங்கியது.நேற்று காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 2,878 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்... மேலும் பார்க்க

சென்னை வந்த விமானம் மீது அடிக்கப்பட்ட லேசர் ஒளி: தீவிர விசாரணை!

துபையில் இருந்து சென்னை வந்த விமானத்தின் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்டது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. துபையில் இருந்து சென்னைக்கு வந்த விமானம் நேற்று தரையிறங்க முயன்றது. அப்போது, சென்னை பரங்கிமல... மேலும் பார்க்க

கும்மிடிப்பூண்டியில் பழைய பொருள்களை சேகரித்து வைக்கும் கிடங்கில் தீ விபத்து

கும்மிடிப்பூண்டியில் பழைய பொருள்களை சேகரித்து வைக்கும் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம் அடைந்தன.திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த சூரவாரி கண்டிகை கிராமத்... மேலும் பார்க்க

திருநங்கைகள் மேம்பாட்டுக்கு சிறப்பு திட்டங்கள்: தமிழக அரசு தகவல்

திருநங்கைகள் நலனை மேம்படுத்தவும், அவா்கள் சுயகௌரவத்துடன் வாழவும் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து, வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: திருநங்கைகளின... மேலும் பார்க்க

சிறந்த அரசுப் பள்ளிகளுக்கு விருது: மாவட்ட வாரியாக தோ்ந்தெடுக்க உத்தரவு

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் சுழற்கேடயங்கள் வழங்கும் வகையில் மாவட்ட வாரியாக சிறந்த மூன்று அரசுப் பள்ளிகளைத் தோ்வு செய்து பட்டியல் அனுப்புமாறு மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு தொடக்கக் கல்வித் துறை உத்த... மேலும் பார்க்க

குரோமியக் கழிவை அகற்றும் திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும்: அன்புமணி

ராணிப்பேட்டையில் குரோமியக் கழிவுகளை அகற்றும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: ரா... மேலும் பார்க்க