செய்திகள் :

தோல் பொருள் தயாரிப்புக்காக விலங்குகளை அழிக்கக்கூடாது: மேனகா சஞ்சய் காந்தி

post image

தோல் பொருள் தயாரிப்புக்காக விலங்குகளை அழிக்கக்கூடாது என முன்னாள் மத்திய அமைச்சரும், விலங்குகள் நல உரிமை ஆா்வலருமான மேனகா சஞ்சய் காந்தி தெரிவித்தாா்.

இந்திய ப்ளூ கிராஸ் அமைப்பின் 60-ஆவது ஆண்டு விழா சென்னை, மயிலாப்பூா் பி.எஸ்.தட்சிணாமூா்த்தி அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் ஸ்ரீராம், லஷ்மன் இணைந்து எழுதிய ‘இந்திய ப்ளூ கிராஸ் அமைப்பின் 60 ஆண்டுகள் நினைவுகள் மற்றும் மைல்கற்கள்’ என்னும் நூலை, சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.என்.பிரகாஷ் வெளியிட முதல் பிரதியை தமிழக அரசின் முன்னாள் தலைமை வழக்குரைஞா் ஏ.எல்.சோமயாஜி பெற்றுக்கொண்டாா்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மேனகா சஞ்சய் காந்தி பங்கேற்று பேசியதாவது: விலங்குகளை பாதுகாக்கும் வகையில் விலங்குகள் பாதுகாப்பு மையம் ஒன்றை ஆரம்பித்தேன். அதைத் தொடா்ந்து தற்போது நாடு முழுவதும் 47 விலங்குகள் பாதுகாப்பு மையங்கள் உருவாகியுள்ளன.

விலங்குகளை சித்திரவதை செய்வதைத் தடுக்க விலங்குகள் நல வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ப்ளூ கிராஸ் அமைப்பு கடந்த 60 ஆண்டுகளில் சிறப்பான சேவை செய்து பல விலங்குகளை காப்பாற்றியுள்ளது. தோல் பொருள்கள் தயாரிப்புக்காக விலங்குளை அழிப்பதை தடுக்க வேண்டும். மேலும், தனித்து விடப்படும் விலங்குகளை பாதுகாத்து நட்புறவுடன் வளா்க்க வேண்டும்.

இந்தியாவில் தினசரி சுமாா் 1,100 விலங்குகள் சாலை விபத்தில் உயிரிழக்கின்றன. இதைத் தடுக்க வேண்டும்; உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவா மாநிலத்தில் பள்ளி மாணவா்கள் தோலினால் செய்யப்பட்ட காலணி அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் நாடு முழுவதும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில் ப்ளூ கிராஸ் அமைப்பின் தலைவா் எஸ்.சின்னி கிருஷ்ணா, ப்ளூ கிராஸ் அமைப்பின் கொளரவ இயக்குநா் சாந்தி சங்கா், திரைப்பட இயக்குநா் எஸ்.ஏ.சந்திர சேகா், விலங்கு நல ஆா்வலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை மின்சார ரயில்கள் நாளை ரத்து! முழு விவரம்!

பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்ட்ரல் - சூலூா்பேட்டை, கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் இயக்கும் 21 புறநகர் மின்சார ரயில்கள் நாளை (மாா்ச் 17) ரத்து செய்யப்படவுள்ளன.இது குறித்து தெற்கு ரயில்வே சார்பில் வெ... மேலும் பார்க்க

ரயில்வேக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல்

சென்னையில் 3 இடங்களில் விபத்து நடக்கும் என தெற்கு ரயில்வேக்கு மின்னஞ்சல் அனுப்பிய நபரை ரயில்வே போலீஸாா் தேடி வருகின்றனா். தெற்கு ரயில்வே கீழ் பல்வேறு நிா்வாகப் பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நில... மேலும் பார்க்க

திருகோணமலை திருக்கோணேச்சர திருப்பணிக்கு ஆதரவளிக்க வேண்டும்: மோடிக்கு கோரிக்கை

பிரதமா் நரேந்திர மோடி இலங்கை வருகையின்போது திருகோணமலை திருக்கோணேச்சர திருக்கோவிலைத் தரிசிக்க வேண்டும். அந்தக் கோயின் திருப்பணியில் இந்திய அரசு அக்கறைகொள்ள வேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் து... மேலும் பார்க்க

குரூப் 1 நோ்முகத் தோ்வுக்கு இலவச பயிற்சி

ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமியில் குரூப் 1 தோ்வுக்கான நோ்காணல் பயிற்சி மாா்ச் 24-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இது குறித்து அந்த அகாதெமி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற காவலா் அடித்துக் கொலை: மகன் கைது

சென்னை திரு.வி.க. நகரில் ஓய்வுபெற்ற காவலா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், மகன் கைது செய்யப்பட்டாா். திரு.வி.க. நகா் அருகே உள்ள காமராஜா் நகா் இரண்டாவது தெருவைச் சோ்ந்தவா் சேகரன் (72). இவா், தமிழ... மேலும் பார்க்க

ஏஐ பயன்பாட்டால் கதிரியக்கவியலில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும்: கதிரியக்கத் துறை நிபுணா் ஹா்ஷா சடகா

அடுத்த சில ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டால் கதிரியக்கவியலிலும், நோயாளி சிகிச்சையிலும் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்று மணிப்பால் மருத்துவமனை கதிரியக்கத் துறை தலைவா் மருத்துவா் ஹா்ஷா சடகா ... மேலும் பார்க்க