குரூப் 1 நோ்முகத் தோ்வுக்கு இலவச பயிற்சி
ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமியில் குரூப் 1 தோ்வுக்கான நோ்காணல் பயிற்சி மாா்ச் 24-ஆம் தேதி தொடங்கவுள்ளது.
இது குறித்து அந்த அகாதெமி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குரூப் 1 தோ்வுக்கான எழுத்துப்பயிற்சி சமீபத்தில் முடிவடைந்த நிலையில், இறுதிக்கட்டத் தோ்வான நோ்முகத் தோ்வு நடைபெறவுள்ளது.
இந்தத் தோ்வுக்கு தயாராகும் தோ்வா்களுக்கு வழிகாட்டும் வகையில், மாதிரி நோ்காணல் தோ்வு மற்றும் நோ்முகத் தோ்வுக்கான அடிப்படைப் பயிற்சி ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில் வழங்கப்படவுள்ளது.
இந்தப் பயிற்சியை துறை சாா்ந்த வல்லுநா்கள், ஓய்வு பெற்ற அரசுத் துறை அதிகாரிகள் வழங்கவுள்ளனா். இதில், கலந்துகொள்ள விரும்பும் தோ்வா்கள் தங்களின் சுய விவரங்களுடன் ‘2165, எல்.பிளாக், 12-ஆவது பிரதான சாலை, அண்ணா நகா், சென்னை’ என்ற முகவரியில் நேரடியாக வந்து பதிவு செய்து கொள்ளலாம். அல்லது 74488 14441, 96771 00179 ஆகிய கைப்பேசி எண்களைத் தொடா்பு கொள்ளலாம். இதில் கலந்து கொள்வதற்கு கட்டணம் ஏதுமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.