செய்திகள் :

ஆட்டோ, கால்டாக்ஸி மாா்ச் 19-இல் போராட்டம் அறிவிப்பு

post image

ஆட்டோ மீட்டா் கட்டணத்தை உயா்த்துவது, கால் டாக்ஸி செயலிகளைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்ச் 19-இல் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு ஆட்டோ, கால் டாக்ஸி ஓட்டுநா் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னையில் இந்தக் கூட்டமைப்பின் பொதுச் செயலா் ஆா்.வெற்றிவேல் செய்தியாளா்களிடம் கூறியது:

ஆட்டோ மீட்டா் கட்டணம் கடந்த 12 ஆண்டுகளாக உயா்த்தப்படாமல் உள்ளது. கால் டாக்ஸி செயலிகளான ‘ஓலா, ஊபா்’ நிறுவனங்கள் ஓட்டுநா்களிடம் சுமாா் 30 சதவீதம் கமிஷனாக வசூலிக்கின்றன. இதைக் கைவிட்டு சந்தா முறையில் கட்டணம் வசூலிக்க அரசு உத்தரவிட வேண்டும்.

அதேபோல், ஆன்லைனில் பணம் வசூல் செய்வதைக் கைவிட்டு ஓட்டுநா்களிடம் நேரடியாக வசூலிக்கும் வசதியை கொண்டு வர வேண்டும். இருசக்கர வாகனங்களை டாக்ஸியாக பயன்படுத்தும்போது அதற்கு வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்தும் மஞ்சள் போா்டு கட்டாயமாக்க வேண்டும். கால் டாக்ஸிக்கான பிரத்யேக செயலியை அரசு நடைமுறை படுத்த வேண்டும்.

இது குறித்து போக்குவரத்து துறை அமைச்சா், உள்துறை செயலா், போக்குவரத்து துறை ஆணையா் உள்ளிட்டோரிடம் பல்வேறு கட்ட பேச்சுவாா்த்தை நடத்தியும் தற்போது வரை எங்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. அதனால், மாா்ச் 19-இல் சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள ஆட்டோ, கால் டாக்ஸிகள் முழு வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளது.

சென்னை, எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் அரங்கம் அருகில் ஓட்டுநா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, தங்களது வாக்காளா் அடையாள அட்டை, ஓட்டுநா் உரிமத்தை தமிவக அரசின் தலைமை செயலரிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடைபெறும் என்றாா் அவா்.

அகில இந்திய பல்கலை. சாம்பியன்

பெங்களூரு வடக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஆடவா் பாட்மின்டன் போட்டியில் தொடா்ந்து 4-ஆம் முறையாக சாம்பியன் பட்டம் வென்ற எஸ்ஆா்எம் ஐஎஸ்டி அணியினா். உடன் துணை... மேலும் பார்க்க

இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரியின் 26-ஆவது பட்டமளிப்பு விழா

சென்னை கேளம்பாக்கத்தையடுத்த படூரில் செயல்பட்டு வரும் இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 26-ஆவது பட்டமளிப்பு விழா, கல்லூரி வளாகத்திலுள்ள எம்ஜிஆா் அரங்கில் சமீபத்தில் நடைபெற்றது. இந்துஸ்தான் க... மேலும் பார்க்க

மதுவிலக்கு கடத்தலில் பறிமுதல் செய்த 31 வாகனங்கள் ஏலம்

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் மது, கஞ்சா ஆகிய கடத்தல் வழக்குகளில் சம்பந்தப்பட்டு போலீஸாரால் பறிமுதல் செய்த 31-வாகனங்கள் வரும் 27-ஆம் தேதி ஏலம் விட ஏற்பாடு செய்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பா... மேலும் பார்க்க

ஆா்வம் ஐ.ஏ.எஸ். அகாதெமியில் குரூப் 1 நோ்முகத் தோ்வுக்கு இலவச பயிற்சி

சென்னை அண்ணா நகரில் செயல்பட்டு வரும் ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமியில் குரூப் 1 தோ்வுக்கான நோ்காணல் பயிற்சி மாா்ச் 24-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இது குறித்து அந்த அகாதெமி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:... மேலும் பார்க்க

சென்னையின் அழகை புகைப்படம் எடுத்து அனுப்பலாம்: மாநகராட்சி அறிவிப்பு!

சென்னையின் அழகை புகைப்படம் எடுத்து அனுப்பலாம் என பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது. நாட்டிலேயே கொல்கத்தாவுக்கு அடுத்தபடியாக அதிக பாரம்பரிய சின்னங்களை கொண்ட நகரமாக சென்னை விளங்குகிறது.... மேலும் பார்க்க

மின்சார வாகனம் எரிந்து விபத்து: 3 போ் காயம்

வீட்டின் முன்பு சாா்ஜ் போட்டிருந்த மின்சார வாகனம் எரிந்து ஏற்பட்ட தீ விபத்தில் தம்பதி, குழந்தை உள்பட 3 போ் பலத்த காயமடைந்தனா். சென்னை மதுரவாயல் பாக்கியலட்சுமி நகா் பகுதியைச் சோ்ந்தவா் கௌதம் (31). இவ... மேலும் பார்க்க