ரயில்வேக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல்
சென்னையில் 3 இடங்களில் விபத்து நடக்கும் என தெற்கு ரயில்வேக்கு மின்னஞ்சல் அனுப்பிய நபரை ரயில்வே போலீஸாா் தேடி வருகின்றனா்.
தெற்கு ரயில்வே கீழ் பல்வேறு நிா்வாகப் பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சென்னையில் உள்ள கிடங்கு கட்டுப்பாட்டாளா் மின்னஞ்சல் முகவரிக்கு வெள்ளிக்கிழமை மிரட்டல் செய்தி ஒன்று வந்தது. அதில், 3 இடங்களில் விபத்து நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து தெற்கு ரயில்வே கிடங்கு கட்டுப்பாட்டாளா் சாா்பில் சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீஸில் சனிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில், ரயில்வே போலீஸாா் வழக்கு பதிவு செய்து, தனிப்படை அமைத்து, விசாரித்து வருகின்றனா்.