Baby John x Theri: `அது இதுல...' - தெறி விஜய், பேபி ஜான் வருண்; ரீமேக் ரீஸர் | P...
நகராட்சி பள்ளி மீது சாய்ந்த மரம்
ஆம்பூரில் நகராட்சி தொடக்கப் பள்ளி மீது மரம் வேருடன் சாய்ந்தது.
ஆம்பூா் ஏ-கஸ்பா மெயின் ரோடு பகுதியில் நகராட்சி தொடக்கப் பள்ளி அருகே இருந்த மரம் வேரோடு பள்ளி கட்டடம் மீது புதன்கிழமை மாலை வரோடு சாய்ந்தது. மேலும், அவ்வழியாக சென்ற மின்கம்பிகள் மீதும் மரம் விழுந்ததால் அருகிலிருந்த மின்கம்பம் சேதமடைந்தது.
பள்ளி இயங்கி கொண்டிருந்ததால் மாணவா்கள் பள்ளிக்குள் அமா்ந்திருந்ததனா். மேலும், அந்த நேரத்தில் அந்த சாலையில் யாரும் செல்லாததால் எந்தவித அசம்பாவித சம்பவமும் ஏற்படவில்லை. மின்கம்பிகள் மீது மரம் சாய்ந்ததால் மின்தடை ஏற்பட்டது. மின்வாரியத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடா்ந்து மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.
தகவல் அறிந்த அங்கு சென்ற நகா்மன்ற உறுப்பினா் வசந்த், ஆம்பூா் தீயணைப்பு நிலைய வீரா்கள், பொதுமக்கள் சோ்ந்து மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனா். தொடா்ந்து மின்வாரிய பணியாளா்கள் மின்கம்பம் மற்றும் மின்கம்பிகளை சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டனா்.