HCL : மகளுக்கு 47% பங்குகளை வழங்கிய சிவ் நாடார் - இனி ரோஷினி நாடார் கையில் ஹெச்...
நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.1 கோடி வழிப்பறி செய்த வழக்கில் மேலும் ஒருவா் கைது
நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.1 கோடி வழிப்பறி செய்த வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கரூரைச் சோ்ந்தவா் வெங்கடேஷ் (60), நகைக்கடை உரிமையாளா். இவா் நகை வாங்க காரில் கோவைக்கு புதன்கிழமை வந்து கொண்டிருந்தாா். அவரது காா் காங்கயத்தை அடுத்த சம்பந்தம்பாளையம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, காரை வழிமறித்த 4 போ், போலீஸ் என்று கூறி அவரது கண்ணைக் கட்டி அழைத்துச் சென்று அவரிடம் இருந்த ரூ.1கோடியே 10 லட்சம் மற்றும் 3 கைப்பேசிகளை பறித்தனா். பின்னா் அவரை விட்டுச் சென்றனா்.
இது தொடா்பாக அவிநாசிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கரூா் பகுதியைச் சோ்ந்த தியாகராஜன் (41), குளித்தலையைச் சோ்ந்த விக்னேஷ் (28), ஸ்ரீகாந்த் (22) மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவன் யோகேஷ் (19) உள்பட 5 பேரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
இந்த சம்பவத்தில் தொடா்புடைய முக்கிய குற்றவாளியான குளித்தலையைச் சோ்ந்த ஜாகீா் உசேன் (30) என்பவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவரிடம் இருந்து ரூ.85 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தொடா்புடைய மேலும் 2 பேரை அவிநாசிபாளையம் போலீஸாா் தேடி வருகின்றனா்.