செய்திகள் :

நகைக்காக தலையணை வைத்து பெண் கொலை!

post image

பென்னாகரம்: பெண்ணைத் தலையணை வைத்து கொலை செய்து, மர்ம நபர்கள் நகை பறிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பென்னாகரம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணைத் தலையணை வைத்து அழுத்தி கொலை செய்து கழுத்தில் அணிந்திருந்த தாலிச் சங்கிலி உள்ளிட்ட 12 சவரன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

பென்னாகரம் அருகே கூக்குட்டமருத அள்ளி ஊராட்சிக்குள்பட்ட பெரிய தோட்டம் புதூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி பிரபுராஜ், இவரின் மனைவி பத்மினி (55) கோயில் பூசாரி.

இவர், வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் தனியாக தூங்கியுள்ளார். சனிக்கிழமை காலை நீண்ட நேரமாகியும் எழாமல் இருந்ததைக் கண்டு, அவருடைய கணவர் பிரபுராஜ் அருகில் சென்று பார்க்கும் போது பத்மினி இறந்து விட்டதாக உறவினர்களுக்கு தெரிவித்துள்ளார்.

அங்கு வந்த உறவினர்கள் பத்மினியின் உடலை வைத்து பூஜை செய்யும் போது கழுத்தில் இருந்த தாலி அறுக்கப்பட்டும், காயங்கள் இருப்பதைப் பார்த்துள்ளனர்.

பின்னர் வீட்டிலிருந்த பீரோவை திறந்து பார்க்கும்போது அதில் வைக்கப்பட்டிருந்த நகை, ரொக்கம் ஆகியவை காணாமல் போனதும் தெரிய வந்தது.

விசாரணை மேற்கொள்ளும் போலீஸார் .

இதையும் படிக்க: அமெரிக்க விமானங்கள் அமிருதசரஸ் வருவது ஏன்? பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

இதுகுறித்து பென்னாகரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், நிகழ்விடத்திற்கு வந்த பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளர் (பொ) ராஜ சுந்தர், காவல் ஆய்வாளர் குமரவேல் பாண்டியன் தலைமையிலான போலீஸார் நிகழ்விடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த பெண்ணைத் தலையணை வைத்து அழுத்தி கொலை செய்துவிட்டு கழுத்தில் இருந்த தாலி சங்கிலி, பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகை, ரூ. 5000 ரொக்கம் ஆகியவற்றினை திருடிச் சென்றுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். எஸ். மகேஸ்வரன் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கொலை காரணம் குறித்து கேட்டறிந்து, பெண்ணைக் கொலை செய்த மர்ம நபர்களை விரைந்து பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.

பின்னர் போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பென்னாகரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

712 குடியிருப்புக்கான ஒதுக்கீடு ஆணையை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்!

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சந்திரயோகி சமாதி, ராதா கிருஷ்ணபுரம் மற்றும் சத்தியவாணி முத்துநகர் ஆகிய திட்டப் பகுதிகளில் 712 குடியிருப்புதாரர்களுக்கு குடியிருப்புக்கான ஒது... மேலும் பார்க்க

குற்றச்சாட்டு கூறுவது ஆளுநர் பதவிக்கு அழகல்ல: அமைச்சர் மு.பெ. சாமிநாதன்

சென்னை: அரசின் மீது குற்றச்சாட்டு கூறுவது ஆளுநர் பதவிக்கு அழகல்ல என அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.தமிழ்தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாத ஐயரின் 171 ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை மாநில கல்லூரி வளாகத்... மேலும் பார்க்க

ஹிந்தி மொழியே! உன் சூழ்ச்சி பலிப்பதில்லை எம்மிடத்திலே! - முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவு

ஹிந்தி மொழியைப் புகட்டுவது கட்டாயமெனில் அதனை ஒழிப்பதும் கட்டாயம் என்ற பாரதிதாசனின் வரிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் பகிர்ந்துள்ளார். தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான நிதியைத் தர மத்திய அரசு மறுக்கிறது எ... மேலும் பார்க்க

'அதிமுக ஒன்றிணைந்தால்தான் தேர்தலில் வெல்ல முடியும்' - ஓபிஎஸ்

அதிமுக ஒன்றிணைய வேண்டுமானால் ஈகோவைக் கைவிட வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார். கோவையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், "எதையும் எதிர்பார்க்காமல் அதிமுகவுக்கு உழைக்கும் உன்ன... மேலும் பார்க்க

உ.வே.சா. பிறந்த நாள் விழா: உத்தமதானபுரத்தில் ஆட்சியா் மரியாதை

நீடாமங்கலம்: தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்த நாள் விழா, வலங்கைமான் அருகே உத்தமதானபுரத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் புதன்கிழமை நடைபெற்றது.தமிழ்த் தாத்தா உ.வே.சா.வின் 171 ஆவது பிறந்த நாள் விழா பல்வே... மேலும் பார்க்க

பெரியார் பல்கலை பதிவாளர் பணி நேர்முகத் தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும்: ராமதாஸ்

பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் பணிக்கு நேர்காணல் நடத்த தடை விதிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் காலியாக இருக்கும் பதிவாளர் பணிக்கு மார்ச் ஒன்ற... மேலும் பார்க்க