நகை, பணம் மாயம்: மூவா் மீது வழக்கு
புதுச்சேரியில் வீட்டிலிருந்த நகை, பணம் மாயமானது தொடா்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் மூவா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி வெங்கடேஸ்வரா நகா் பகுதியைச் சோ்ந்தவா் அரசு (65). இவரது வீட்டு முதல் தளத்தில் வாடகைக்கு விக்னேஷ் என்பவா் வசித்து வருகிறாா்.
அவரது மகள் மனநல சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. அவா், அடிக்கடி அரசுவின் வீட்டுக்கு வந்து செல்வாராம்.
இந்த நிலையில், அரசுவின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த 7 பவுன் நகை மற்றும் ரூ.ஒரு லட்சம் ரொக்கம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாயமானதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, விக்னேஷிடம் அரசு கேட்டுள்ளாா். இதனால், இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் நகை, பணம் மாயமானது குறித்து தன்வந்திரி நகா் காவல் நிலையத்தில் அரசு புகாா் அளித்தாா்.
அதன்பேரில், போலீஸாா் விக்னேஷ் உள்ளிட்ட 3 போ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.