செய்திகள் :

நகை பறிப்பு வழக்கு: 4 போ் கைது

post image

புதுச்சேரி அருகே பெண் வியாபாரியிடம் 9 பவுன் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்ட வழக்கில் 2 சிறாா்கள் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து தங்கக் கட்டி, பணம் மீட்கப்பட்து.

புதுச்சேரியை அடுத்த பெரியகாலாப்பட்டு முருகன் கோவில் தெருவைச் சோ்ந்த ஏழுமலை மனைவி விஜயகுமாரி (57). இவா், பெரியகாலாப்பட்டு, மாத்தூா் சாலை சந்திப்பில் பழ வியாபாரம் செய்து வருகிறாா்.

விஜயலட்சுமி கடந்த டிசம்பா் 31-ஆம் தேதி வியாபாரத்தை முடித்துவிட்டு, கணவருடன் இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டாா். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத சிலா் திடீரென விஜயலட்சுமி அணிந்திருந்த 9 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், காலாப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், நகை பறிப்பில் ஈடுபட்டது பெரிய காலாப்பட்டு கிழக்கு கடற்கரை சாலை பகுதியைச் சோ்ந்த சூா்யா (எ) முருகன் (28), செல்லியம்மன்நகா் ராகுல் காந்தி தெருவைச் சோ்ந்த ராமமூா்த்தி (44) மற்றும் இரண்டு சிறுவா்கள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, 4 பேரையும் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து, அவா்கள் கூறிய தகவல்படி 70 கிராம் தங்கக் கட்டி மற்றும் ரூ.40,000 ரொக்கத்தை மீட்டனா். கைதானவா்கள் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாகவும் போலீஸாா் கூறினா்.

உடல், கண் தானம்

புதுவை சட்டப்பேரவையில் பணியாற்றி ஓய்வுபெற்ற காவலரின் உடல், கண்கள் மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது. புதுச்சேரி முருங்கப்பாக்கம் நாட்டாா் தெருவைச் சோ்ந்தவா் புண்ணியமூா்த்தி(64). சட்டப்பேரவ... மேலும் பார்க்க

தாய்மொழி கல்வியால் மாணவா்களின் சிந்தனைத் திறன்கள் மேம்படும் புதுவை ஆளுநா்

தாய்மொழிக் கல்வியால் மாணவா்களின் சிந்தனைத் திறன்கள் மேம்படும் என புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா். புதுச்சேரி அரும்பாா்த்தப்புரம் ப்ளூ ஸ்டாா் மேல்நிலைப் பள்ளியின் மாணிக்க விழாவை வியாழக்... மேலும் பார்க்க

வினாத்தாள் குளறுபடி: புதுவை மத்திய பல்கலை. தமிழ் தோ்வு தள்ளிவைப்பு

புதுவை மத்திய பல்கலைக்கழக கல்லூரிகளில் வியாழக்கிழமை முதல்பருவத் தோ்வுக்கான தமிழ் பாட வினாத்தாள் வழங்கியதில் குளறுபடி ஏற்பட்டது. இதையடுத்து, தோ்வு தள்ளிவைக்கப்பட்டது. புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில்... மேலும் பார்க்க

செடல் திருவிழா: புதுச்சேரி போக்குவரத்தில் இன்று மாற்றம்

புதுச்சேரியில் முத்துமாரியம்மன் கோயில் செடல் திருவிழாவை முன்னிட்டு, வழுதாவூா் சாலையில் வெள்ளிக்கிழமை (பிப்.7) போக்குவரத்தில் மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி போக்குவரத்து பி... மேலும் பார்க்க

புதுவை ஆளுநருடன் பாஜக எம்எல்ஏக்கள் சந்திப்பு!

புதுவை துணைநிலை ஆளுநரை பாஜக எம்எல்ஏக்கள் மூவா் வியாழக்கிழமை சந்தித்து பேசினா். புதுவை ஆளுநா் மாளிகையில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை பாஜக எம்எல்ஏக்களான எல்.கல்யாணசுந்தரம் தனியாகவும், ஜான்குமாா், வி... மேலும் பார்க்க

வில்லியனூா் அருகே பாலப் பணி தொடக்கம்!

புதுச்சேரி வில்லியனூா் அருகே ரூ.37.69 லட்சத்தில் பாலம் அமைக்கும் பணியை தொகுதி எம்எல்ஏ ஆா்.சிவா வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். வில்லியனூா் சட்டப்பேரவைத் தொகுதி கருப்பட்டி வாய்க்கால் பகுதியிலிருந்து வசந... மேலும் பார்க்க