செய்திகள் :

நடிகர், இசையமைப்பாளர் இல்லாமல் திரைப்படம்; ஏஐ உதவியுடன் கன்னட திரையுலகில் புதிய மைல்கல்!

post image

கன்னட திரையுலகில் புதிய மைல்கல்லாக, முழுவதும் செயல் நுண்ணறிவைப் பயன்படுத்தி ஒரு திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

பெங்களூருக்கு அருகிலுள்ள சித்தேஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த நரசிம்ம மூர்த்தி என்பவர், செயல் நுண்ணறிவைப் பயன்படுத்தி லவ் யூ என்ற திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். இந்தப் படத்தில் நடிகர்கள், இசைக்குழுவினர் என மனிதர்களுக்குப் பதிலாக, முழுக்கமுழுக்க செயல் நுண்ணறிவு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

நூதன் என்கிற கிராஃபிக் டிசைனரின் உதவியுடன் லவ் யூ படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த முழுப்படமும் வெறும் ரூ. 10 லட்சம் பட்ஜெட்டில், வெறும் ஆறுமாத காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. பட்ஜெட்டில் பெரும்பாலும் மென்பொருள் உரிமத்துக்காகவே செலவிடப்பட்ட இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் வசனங்களை நரசிம்ம மூர்த்தியே எழுதியுள்ளார்.

இரு நபர்கள் மட்டுமே சேர்ந்து உருவாக்கிய இந்தப் படத்துக்கு, யு/ஏ (U/A) சான்றிதழை மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் வழங்கியுள்ளது.

6 மாதங்களுக்கு முன்னரே, 30 வெவ்வேறு செயல் நுண்ணறிவுக் கருவிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப் படம், தற்போதைய வளர்ச்சியடைந்த செயல் நுண்ணறிவு உதவியுடன் இயக்கினால், ஆயிரம் மடங்கு மேலும் சிறப்பானதாக இருக்கும் என்று இருவரும் கூறுகின்றனர்.

இதையும் படிக்க:சர்ச்சைகளுக்கு மத்தியில் ஆள்மாறாட்டம் மூலம் 5.3 மில்லியன் டாலர் வருவாய்!

இந்தியா மீட்டில் கோனெரு ஹம்பி வெற்றி

மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற ஃபிடே மகளிா் கிராண்ட் ப்ரீ 2024-25 செஸ் போட்டியின், இந்தியா மீட்டில் இந்தியாவின் கோனெரு ஹம்பி புதன்கிழமை வெற்றி பெற்றாா்.போட்டியின் 9 சுற்றுகள் முடிவில் அவரும், சீனாவின... மேலும் பார்க்க

பெஹல்காம் தாக்குதல் - புகைப்படங்கள்

பெஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது நடந்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில், பலியானோர் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய காங்கிரஸ் தலைவர் கே.சி. வேணுகோபால்.பெஹல்காம் பயங்கரவாத தாக்குதல் ந... மேலும் பார்க்க

நிறம் மாறும் உலகில்: ஓடிடி ரிலீஸ் தேதி!

அறிமுக இயக்குநர் இயக்கிய ‘நிறம் மாறும் உலகில்’ படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.பாரதிராஜா, நட்டி, ரியோ ராஜ், சாண்டி இணைந்து அறிமுக இயக்குநர் பிரிட்டோ இயக்கத்தில் ’நிறம் மாறும் உலகில்' எனும் பட... மேலும் பார்க்க