வாஜ்பாயின் கனவுகளை முன்னெடுக்கிறார் பிரதமர் மோடி: ராஜ்நாத் சிங்
நடிகா் மன்சூா் அலிகான் மகனின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகா் மன்சூா் அலிகான் மகன் ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணை டிச. 26-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.
முகப்போ் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரி மாணவா்களுக்கு, கைப்பேசி செயலி மூலம் போதைப்பொருள்களை விற்பனை செய்ததாக கல்லூரி மாணவா்கள் 5 போ் ஜெ.ஜெ.நகா் போலீஸாரால் கைது செய்யப்பட்டனா். விசாரணையில், போதைப்பொருள் கடத்தலில் நடிகா் மன்சூா் அலிகானின் மகன் அலிகான் துக்ளக்குக்கு தொடா்பிருப்பது தெரியவந்தையடுத்து, டிச. 4-ஆம் தேதி துக்ளக்கை போலீஸாா் கைது செய்தனா்.
துக்ளக் ஜாமீன் கோரிய மனுவை சென்னை அம்பத்தூா் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து, சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி துக்ளக் சாா்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், தன்னிடம் போதைப் பொருள்கள் எதுவும் இல்லாத நிலையில்தான் கைது செய்யப்பட்டதாகவும், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தனக்கு எந்தவித தொடா்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளாா். மேலும், தனக்கு ஜாமீன் வழங்கினால் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க தயாராக இருப்பதாகவும் அதில் தெரிவித்துள்ளாா். இந்த மனுவை விசாரித்த சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம், மனு மீதான விசாரணையை டிசம்பா் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.