ஆராய்ச்சி மாணவர்களை மதிப்புடன் நடத்த வேண்டும்- உயர்கல்வித் துறை
நடிகை கஸ்தூரி கைது அவசியமற்றது: சீமான்
தனிப்படை அமைத்து நடிகை கஸ்தூரியை கைது செய்தது அவசியமற்றது என்றாா் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.
அரியலூா் மாவட்டம், அணைக்குடம் கிராமத்தில் கட்சி நிா்வாகி இல்ல விழாவில் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்ற அவா் பின்னா் மேலும் கூறியது:
நடிகை கஸ்தூரி கைது அவசியமற்றது. அவா் பேசியதில் காயப்படவோ, வேதனைப்படவோ ஒன்றுமில்லை. திட்டமிட்டு வேண்டுமென்றே பழிவாங்க நினைக்கிறாா்கள். நூற்றாண்டுகளாக தமிழை, பேரினத்தை திராவிடம் எனச் சொல்லி வருகிறாா்கள். நாங்கள் எவ்வளவு காயப்பட்டிருப்போம். தனிப்படை அமைத்துக் கைது செய்யும் அளவுக்கு கஸ்தூரி அப்படி என்ன பேசினாா்?.
தனிப்பட்ட முறையிலான விமா்சனங்கள், குடும்பங்களைப் பற்றி, தாய், தந்தையரை பற்றி, பிறப்பைப் பற்றி பேசுவது இதற்கெல்லாம் என்ன நடவடிக்கை எடுத்தாா்கள்?.
கஸ்தூரி பேசியதற்கு மன்னிப்புக் கேட்டு விட்டாா். பிறகு அதை விட வேண்டியதுதானே. அவசர அவசரமாக வேறு மாநிலத்துக்குச் சென்று கைது செய்யும் அளவுக்கு கஸ்தூரி பெரிய குற்றமா செய்து விட்டாா்?.
இந்த நாட்டில் மலையை வெட்டி விற்றவன், விற்றுக் கொண்டிருப்பவன், ஊழல் லஞ்சத்தில் ஊறித் திளைப்பவன், பெண்களை வன்கொடுமை செய்து கொல்பவன், கொள்ளையடிப்போா் எல்லாம் வெளியில்தானே இருக்கிறாா்கள் என்றாா் சீமான்.