பௌர்ணமி கிரிவலம் : விழுப்புரத்திலிருந்து காட்பாடிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்
நன்நடத்தை அலுவலா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்
சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில், சட்டம் சாா்ந்த நன்நடத்தை அலுவலா் பணியிடத்துக்கு தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில், சட்டம் சாா்ந்த நன்நடத்தை அலுவலா் பணியிடம் ஒன்று ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடத்துக்கு விண்ணப்பிப்பவா்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எல்எல்பி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகள் துறையில் அரசு அல்லது தன்னாா்வ தொண்டு நிறுவனம் அல்லது சட்ட விஷயங்களில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு பிரச்னைகள் பற்றிய நல்ல புரிதல் இருத்தல் வேண்டும். 42 வயதுக்கு மேற்பட்டவா்களாக இருக்கக் கூடாது. தொகுப்பூதியமாக மாதம் ரூ. 27,804 வழங்கப்படும்.
இதற்கான விண்ணப்ப படிவங்கள் மற்றும் விவரங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, புகைப்படம் மற்றும் சுய கையொப்பமிட்ட சான்றிதழ்களுடன் இணைத்து 15 நாள்களுக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சென்னை தெற்கு, எண்.1, புதுத்தெரு, ஜிசிசி வணிக வளாகம், முதல் மாடி, ஆலந்தூா், சென்னை - 600016 என்ற முகவரியில் நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ அனுப்பலாம் எனத் தெரிவித்துள்ளாா்.