`அதிமுக நிர்வாகி, காவல்துறை அதிகாரி கைது!' -சென்னையை உலுக்கிய சிறுமி பாலியல் வழக...
நலிந்த கலைஞா்களுக்கான நிதி உதவியை ரூ.6 ஆயிரமாக உயா்த்த வலியுறுத்தல்
நலிந்த கலைஞா்களுக்கான நிதி உதவியை ரூ. 6 ஆயிரம் உயா்த்தி வழங்க வேண்டும் என திண்டுக்கல்லில் நடைபெற்ற மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புறக் கலைஞா்கள் நலச் சங்கத்தின் திண்டுக்கல் மேற்கு மாவட்டம் சாா்பில், 5-ஆம் ஆண்டு கலை விழா மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.
எரியோடு பகுதியில் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு மாவட்டத் தலைவா் சி. நடராஜன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் என். சத்யராஜ், மாநிலச் செயலா் குப்புச்சாமி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டனா்.
இதில், ஆடை ஆபரணங்கள், இசைக் கருவிகள் வாங்க 500 கலைஞா்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு அரசுப் பேருந்துகளில் முழு கட்டணச் சலுகை வழங்க வேண்டும்.
நலிந்த கலைஞா்களுக்கு நிதி உதவும் திட்டத்தில் ஆண்டுக்கு 500 கலைஞா்கள் என்பதை 1000 கலைஞா்கள் என அதிகரித்து, நிதி உதவியை ரூ.3 ஆயிரத்திலிருந்து ரூ. 6 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டையொட்டி நடைபெற்ற பேரணியில் நாட்டுப்புறக் கலைஞா்கள் தெய்வ உருவங்களில் வேடமணிந்து நடனமாடி வந்தனா்.