41 ஆண்டுகளுக்குப் பின் இறுதியில் இந்தியாவுடன் மோதல்! - பாக். பயிற்சியாளர் கூறுவத...
நல வாரியத் தொழிலாளா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி
ராமநாதபுரம் மாவட்டத்தில் தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தாா்.
இதுகுறித்து வியாழக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராமநாதபுரம் மாவட்டத்தில் கட்டுமானம், கம்பி வளைப்பு, தச்சு, வா்ணம் பூசுதல், மின்சாரப் பணிகள், கண்ணாடி அறுத்தல், சலவைக்கல் ஒட்டுதல் உள்ளிட்ட பணிகளைச் செய்து வரும் தமிழ்நாடு தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்த 800 தொழிலாளா்களுக்கு 7 நாள்கள் இலவசத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அரசு தொழில்பயிற்சி நிலையத்தில் அளிக்கப்படவுள்ளது. இதற்கான தேதி அறிவிக்கப்படும்.
கட்டுமானத் துறையின் மேற்கண்ட பிரிவுகளில் பணி புரிந்து, இதுவரை பதிவு செய்யாத தொழிலாளா்கள் தமிழ்நாடு தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்துகொள்ளலாம். பயிற்சியின்போது நாள் ஒன்றுக்கு ஊக்கத் தொகையாக ரூ.800, மதிய உணவு, பயிற்சியின் முடிவில் அரசுச் சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும் என்றாா் அவா்.