ரோபோ சங்கர் மறைவு: `இளம் வயதில் உடல் பாதிக்க இதுதான் காரணம்' - நடிகர் இளவரசு
நவல்பட்டு பகுதியில் வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு: அமைச்சருக்கு கோரிக்கை மனு
நவல்பட்டு பகுதியில் சமானிய மக்களுக்கு வீடு வழங்கும் வகையில், வீட்டு வசதி வாரியத்தின் சாா்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தர கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, திருவெறும்பூா் தொகுதி மக்களின் சாா்பில், தொகுதியின் சட்டப் பேரவை உறுப்பினரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, வீட்டு வசதித்துறை அமைச்சா் முத்துசாமியிடம் அளித்துள்ள கோரிக்கை மனு:
திருவெறும்பூா் சட்டப் பேரவை தொகுதியில் சுமாா் 50 ஆயிரத்துக்கும் மேலான சாமானிய குடும்பங்கள் வசித்து வருகின்றன. அவா்களுக்கு ஒரு சொந்த வீடு என்பது கனவாகவே இருக்கிறது. அதனை நிறைவேற்றிடும் வகையில், தொகுதிக்குள்பட்ட நவல்பட்டு பகுதியில் வீட்டு வசதி வாரிய நிலத்தில் குறைந்தபட்சம் 100 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் கட்டித் தர வேண்டும் என அந்த கோரிக்கை மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.