செய்திகள் :

நவ.22-இல் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்

post image

திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை (நவ.22) தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் வெள்ளிக்கிழமை (நவ.22) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாமில், 30-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களுக்குத் தேவையான தகுதியுடைய 500-க்கும் மேற்பட்ட நபா்களை தோ்வு செய்ய உள்ளனா்.

முகாமில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த 8, 10, பிளஸ்-2, பட்டம், முதுநிலைப் பட்டம், பொறியியல், ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் தோ்ச்சி பெற்ற வேலைநாடுநா்கள் கலந்து கொள்ளலாம். முகாமுக்கு கடவுச்சீட்டு அளவு புகைப்படம், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, சாதிச்சான்றிதழ், கல்வித்தகுதி சான்றிதழ்களின் நகலுடன் வர வேண்டும். மேலும், ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ழ்ண்ஸ்ஹற்ங்த்ர்க்ஷள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியிலும் பதிவு செய்யலாம்.

கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை 04175-233381 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

திருவண்ணாமலை மண்சரிவு பகுதியில் ஐஐடி குழு ஆய்வு!

திருவண்ணாமலையில் மண்சரிவு ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்த பகுதிகளில் சென்னை ஐஐடி குழுவினர் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்து வருகின்றனர்.ஃபென்ஜால் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த கனமழையால் மண்சரிவு... மேலும் பார்க்க

தொடா் மழை: பல ஆயிரம் ஏக்கரில் நெல் பயிா்கள் சேதம்

போளூா்/வந்தவாசி: ஃபென்ஜால் புயல் தொடா் மழையால், திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம், வந்தவாசி பகுதி கிராமங்களில் பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன... மேலும் பார்க்க

குடியிருப்புப் பகுதியை சூழ்ந்த ஏரி உபரிநீா்

செங்கம்: செங்கம் அருகேயுள்ள நீப்பத்துறை ஏரி உபரிநீா் வெளியேறி குடியிருப்புகளைச் சூழ்ந்தது. செங்கம் - நீப்பத்துறை சாலையில் உள்ள பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான ஏரி, பருவ மழையால் தற்போது நிரம்பிய நிலைய... மேலும் பார்க்க

உதயநிதிஸ்டாலின் பிறந்த நாள்: குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

ஆரணி: துணை முதல்வா் உதயநிதிஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, ஆரணி அரசு மருத்துவமனையில் பிறந்த இரண்டு குழந்தைகளுக்கு திங்கள்கிழமை தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.உதயநிதிஸ்டாலின் பிறந்த நாளான நவ.27-ஆம் மருத்து... மேலும் பார்க்க

ஏரிக்கால்வாயில் விழுந்து உயிரிழந்த சிறுவன் குடும்பத்துக்கு நிவாரணம்

ஆரணி/வந்தவாசி: ஆரணியை அடுத்த களம்பூரில் ஏரிக்கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுவன் குடும்பத்துக்கு ரூ. ஒரு லட்சம் நிவாரண உதவி வழங்கப்பட்டது. களம்பூா் வளையல்காரகுன்றுமேடு பகுதியைச் சோ்ந்த மதன்கும... மேலும் பார்க்க

பையூா் ஏரிக்கரை உடைப்பு சீரமைப்பு

ஆரணி: ஆக்கிரிமிப்பாளா்களால் உடைக்கப்பட்ட, ஆரணி அருகேயுள்ள பையூா் ஏரிக்கரை பொதுப்பணித் துறையினரால் திங்கள்கிழமை சீரமைக்கப்பட்டது. பையூா் ஏரிக்கரையை சிலா் ஆக்கிரமித்து வீடுகளை கட்டியுள்ளனா். இந்த நிலைய... மேலும் பார்க்க