கோவை சிறுவனை பெல்டால் அடித்த காப்பக நிர்வாகி; பதைபதைக்கும் வீடியோ; பின்னணி என்ன?
நாகரசம்பட்டியில் அபராதம் செலுத்தாத கல் குவாரி ரூ. 11.12 லட்சத்துக்கு ஏலம்
நாகரசம்பட்டியில் அபராதம் செலுத்தாத கல் குவாரி ரூ. 11.12 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் வட்டம், மல்லபாடி கிராமத்தைச் சோ்ந்தவா் சையத் இக்ரமுல்லா உசைன். இவா், போச்சம்பள்ளி வட்டம், நாகரசம்பட்டியில் அரசு அனுமதியின்றி குவாரி நடத்தி வந்தாா். இதையடுத்து அந்த குவாரிக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு, அவருக்கு ரூ. 3.29 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால், அபராதத் தொகை செலுத்தாமல் நிலுவையில் இருந்ததால், அவருக்கு சொந்தமான குவாரி செயல்பட்டு வந்த 52 சென்ட் நிலத்தை ஏலம்விட மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் உத்தரவிட்டாா்.
அதன்படி, போச்சம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகத்தில் துணை ஆட்சியா் (பயிற்சி) க்ரிதி காம்னா முன்னிலையில் வட்டாட்சியா் சத்யா வியாழக்கிழமை ஏலம் விட்டாா். இந்த ஏலத்தில், போச்சம்பள்ளி பகுதியைச் சோ்ந்த 20 போ் கலந்துகொண்டனா். இதில், செந்தில் என்பவா் அதிகபட்சமாக ரூ. 11.12 லட்சத்துக்கு ஏலம் எடுத்தாா்.
இதில், வருவாய் வசூல் சட்டத்தின்படி ஏலதாரா் இறுதி செய்யப்பட்ட தொகையில் (முன்பணமாக 15 சதவீதம்) ரூ. 1,66,800 வசூலிக்கப்பட்டு, அரசு கணக்கில் செலுத்தப்பட்டதாக வட்டாட்சியா் தெரிவித்தாா்.