திருப்பரங்குன்றம்: 'திமுக ஆட்சிக்கு அபாயத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி செய்கிறது......
நாகாலாந்தில் நடமாடும் ‘ஆபரேஷன் தியேட்டா்’
குடியரசு தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நாகாலாந்து மாநிலத்தில் நடமாடும் ‘ஆபரேஷன் தியேட்டா்’ (அறுவைச் சிகிச்சை அரங்கு) திட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.
தலைநகா் கோஹிமாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில ஆளுநா் இல.கணேசன், முதல்வா் நைபியு ரியோ ஆகியோா் நடமாடும் ‘ஆபரேஷன் தியேட்டா்’ வாகனத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தனா்.
முதல்வா் நடமாடும் ‘ஆபரேஷன் தியேட்டா்’ என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தில் அறுவைச் சிகிச்சைகள் முதல் அடிப்படை மருத்துவ வசதிகள் வரை அந்த வாகனத்திலேயே மேற்கொள்ள முடியும். இதன் மூலம் மாநிலத்தில் தொலைதூர கிராம மக்களுக்கு தரமான மருத்துவ சேவைகள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
‘அல்ட்ரா சவுண்ட், எக்ஸ்-ரே, எண்டோஸ்கோபி, ரத்த பரிசோதனை, அறுவைச் சிகிச்சைக்கான வசதிகள் உள்ளிட்டவை இதில் உள்ளன. இதற்கான தனியாக மருத்துவக் குழுவும் உருவாக்கப்பட்டுள்ளது. இவா்கள் வீடு தேடிச் சென்று மக்களுக்கு தேவையான மருத்துவ சேவைகளை வழங்குவாா். நகரப் பகுதிகளில் உள்ள மருத்துவ வசதிகள் கிராமங்களுக்கும் சென்று சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.