செய்திகள் :

அமெரிக்க விமானத்தில் வரும் இந்தியர்களின் குற்றப் பின்னணியை சரிபார்க்கும் என்ஐஏ!

post image

அமெரிக்காவில் இருந்து சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்களுடன் வந்துகொண்டிருக்கும் விமானம் இன்னும் சற்றுநேரத்தில் பஞ்சாபில் தரையிறங்கவுள்ளது.

சட்டவிரோதமாக குடியேறிய இந்தியா்களில் முதல்கட்டமாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலானோா் அமெரிக்காவின் சி-17 ராணுவ விமானம் மூலம் அந்நாட்டிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்தது. எத்தனை பேரை அமெரிக்கா அனுப்பியது என்ற தகவல் வெளியாகவில்லை. எனினும், 205 பேர் விமானத்தில் வந்துகொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய வெளியுறவுத் துறை இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடாத நிலையில், இன்னும் சற்றுநேரத்தில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் குற்ற வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட 100-க்கும் அதிகமானோர் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர். அதில், 20-க்கும் மேற்பட்டோர் அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்த நிலையில், அமெரிக்காவில் இருந்து வந்துகொண்டிருக்கும் விமானத்தில் உள்ள 205 பேரின் குற்றப்பின்னணியை சரிபார்க்கும் நடவடிக்கையில் என்ஐஏ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விமானத்தில் பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமிர்தசரஸ் விமான நிலையத்தில் இந்தியர்கள் தரையிறங்கியவுடன் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குச் செல்ல உதவியவர்கள் குறித்த தகவலை பெற விசாரணை நடத்த வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படிக்க : சாம்சங் தொழிலாளர்கள் 3 பேர் தற்காலிக பணியிடை நீக்கம்: ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

வரும் 13-ஆம் தேதி அமெரிக்காவுக்கு பிரதமா் மோடி அரசு முறைப் பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற சில வாரங்களில், சட்டவிரோதமாக குடியேறிய இந்தியா்களை வெளியேற்றும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றவுடன் அந்நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவா்களை வெளியேற்றவுள்ளதாக அறிவித்தாா். இந்த விவகாரத்தில் இந்திய பிரதமா் மோடி நல்ல முடிவை எடுப்பாா் என பிரதமா் மோடியுடன் தொலைபேசியில் உரையாடிய பின் கடந்த 27-ஆம் தேதி அவா் கூறினாா். சுமாா் 18,000 இந்தியா்கள் சட்ட விரோதமாக அமெரிக்காவில் குடியேறி உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, டிரம்ப் பதவியேற்பு விழாவில் பங்கேற்று இந்தியா திரும்பும் முன் செய்தியாளா்கள் சந்திப்பில் பேசிய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா், சட்டவிரோதமாக குடியேறியவா்கள் இந்தியா்கள் என உறுதிசெய்யப்பட்டால் அவா்களைத் திருப்பி அழைத்துக்கொள்வதாகத் தெரிவித்தாா்.

தில்லி தேர்தல்: கேஜரிவால், அதிஷி உள்ளிட்டோர் வாக்களித்தனர்!

தில்லி பேரவைத் தேர்தலில் முன்னாள் முதல்வர் கேஜரிவால் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். தலைநகர் தில்லியில் 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வரு... மேலும் பார்க்க

நடுரோட்டில் ஆட்டோ ஓட்டுநருடன் ராகுல் டிராவிட் வாக்குவாதம்!

நடுரோட்டில் ஆட்டோ ஓட்டுநருடன் வாக்குவாதம் செய்த டிராவிட்டின் விடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.அமைதியான ஆட்டம் மற்றும் மிகச்சிறந்த தலைமைக்கு பெயர் பெற்றவரான ராகுல் டிராவிட், பெங்களூருவில் ஒரு ஆ... மேலும் பார்க்க

தில்லி தேர்தல்: சோனியா, ராகுல், பிரியங்கா காந்தி வாக்களித்தனர்!

தில்லி பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் வாக்களித்தனர். தலைநகர் தில்லியில் 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் இன்று காலை 7 மணிக்குத் தொட... மேலும் பார்க்க

டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்! சாதனை படைத்த ரஷீத்கான்!

டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி ரஷீத்கான் புதிய சாதனை படைத்துள்ளார்.ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரஷீத் கான், ஐபிஎல், பிபிஎல், சிபிஎல், பிக்-பாஸ் உள்... மேலும் பார்க்க

கும்பமேளா: திரிவேணி சங்கமத்தில் நீராடிய பிரதமர் மோடி!

பிரயாக்ராஜில் அமைந்துள்ள திரிவேணி சங்கமத்தில் பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை காலை புனித நீராடினார்.பிரயாக்ராஜில் அமைந்துள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கடந்த ஜன. 13-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று... மேலும் பார்க்க

தில்லி பேரவைத் தேர்தல்: காலை 9 மணி நிலவரம்!

தில்லி பேரவைத் தேர்தலில் காலை 9 மணி நிலவரம் குறித்த விவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தலைநகரான தில்லியில் பேரவைத் தேர்தலில் 1.56 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலைய... மேலும் பார்க்க