குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை: தில்லியில் கடும் போக்குவரத்து நெரிசல்!
நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் அண்ணன் கோபாலன் மறைவு: முதல்வர் இரங்கல்
நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் அண்ணன் .இல.கோபாலன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில்,
நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் அண்ணன் இல.கோபாலன் புதன்கிழமை காலை(ஜன.8) காலை மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன்.
இதையும் படிக்க |இஸ்ரோ பணி அனைவரது கூட்டுப் பணி: வி.நாராயணன்
தலைவர் கலைஞர் மீதும் என் மீதும் மாறாத பற்று கொண்ட இல.கணேசன் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பினால் அவரைப் போன்றே நானும் வருந்துகிறேன். உடன்பிறந்த அண்ணனை இழந்து தவிக்கும் அவருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.