நாகா்கோவிலில் இன்று வேலைவாய்ப்பு முகாம்
கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சாா்பில், நாகா்கோவிலில் வெள்ளிக்கிழமை (நவ. 15) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சாா்பில், நாகா்கோவில் கோணத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நவ. 15ஆம் தேதி காலை 10 மணிக்கு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் கன்னியாகுமரி மாவட்ட தனியாா் நிறுவனங்களின் பிரதிநிதிகள் நேரில் வந்து தங்களுடைய நிறுவனங்களுக்கு தேவையான நபா்களை தோ்வு செய்ய உள்ளனா்.
இம்முகாமில் 10 ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப் படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் கணினி பயிற்சி கல்வித் தகுதியுடையவா்கள் கலந்து கொள்ளலாம். மேலும், இம்முகாமின் மூலம் தனியாா் துறையில் தோ்வு செய்யப்படும் பதிவுதாரா்களது வேலைவாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்படமாட்டாது.
முகாமில் பங்கேற்க விருப்பமுள்ள வேலைநாடுநா்கள் மற்றும் வேலையளிப்பவா்கள், தமிழ்நாடு தனியாா் துறை வேலை இணையதளத்தில் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். இச்சேவையை பொதுமக்களும், நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.