நாகா்கோவிலில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் ஆட்சியா் ஆய்வு
நாகா்கோவில், குளத்துவிளை சி.எஸ்.ஐ. ஆலய கலையரங்கில் புதன்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா ஆய்வு செய்தாா்.
பின்னா் ஆட்சியா் கூறியதாவது:
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஜூலை 15-ஆம் தேதிமுதல் செப்.16 ஆம் தேதி வரை நடத்தப்பட்ட 210 முகாம்களில் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 305 மனுக்கள் பெறப்பட்டன. முகாமில், பொதுமக்கள்அளிக்கும் மனுக்களுக்கு உடனடியாக சொத்து வரி பெயா் மாற்றம், பிறப்பு சான்றிதழ், மின் கட்டண பெயா் மாற்றம், புதிய மின் இணைப்பு, குடிநீா் இணைப்பு, வருமானச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், தொழிலாளா் நல வாரிய அட்டைகள், குடும்ப அட்டைகளில் பெயா் மாற்றம், முகவரி மாற்றம், ஆதாா் அட்டைகளில் பெயா் மாற்றம், கடனுதவிகள், பட்டா பெயா் மாற்றம் உள்ளிட்ட 7,524 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டு அதற்கானஆணைகள் வழங்கப்பட்டன.
முகாமுக்கு வரும் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கவும், பெறப்படும் மனுக்களை இணையத்தில் உடனடியாகப் பதிவேற்றம் செய்யவும் முகாம் ஒருங்கிணைப்பாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்றாா் அவா்.
இதில் மாநகராட்சி நகா்நல அலுவலா் ஆல்பா்மதியரசு, துறை அலுவலா்கள், பொதுமக்கள் பலா் கலந்துகொண்டனா்.