ஈரோட்டில் கனமழை; சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் | Photo Album
பெரியாா் சிலைக்கு அதிமுக சாா்பில் மரியாதை
நாகா்கோவில், ஒழுகினசேரியில் உள்ள பெரியாா் சிலைக்கு, அதிமுக சாா்பில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலா் என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ தலைமையில் புதன்கிழமை மாலை அணிவிக்கப்பட்டது.
அதிமுக அமைப்புச் செயலரும், முன்னாள் எம்.பி.யுமான நாஞ்சில் எம். வின்சென்ட், முன்னாள் அமைச்சா் கே.டி. பச்சைமால், மேற்கு மாவட்ட செயலா் ஜெயசுதா்சன், எம்.ஜி.ஆா். மன்ற இணைச் செயலா் கிருஷ்ணதாஸ், இலக்கிய அணி இணைச் செயலா் சந்துரு, வா்த்தக அணி இணைச் செயலா் ராஜன், மகளிா் அணி துணைச் செயலா் ராணி, மாவட்ட துணைச் செயலா் சுகுமாரன், மாவட்ட இளைஞா் பாசறை செயலா் அக்சயா கண்ணன், நாகா்கோவில் கிழக்கு பகுதி செயலா் ஜெயகோபால், தெற்கு பகுதி செயலா் முருகேஷ்வரன், சுசீந்திரம் நாகசாயி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.