புலிகளுக்கு ஆபத்து: உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் -மத்திய அரசு, சிபிஐ உ...
அதங்கோடு பகுதியில் பாதை கோரி போராட்டம்
களியக்காவிளை அருகே அதங்கோடு பகுதியில் அய்யா நாராயண வைகுண்டசுவாமி நிழல் தாங்கல் செல்ல பாதை கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கன்னியாகுமரி - காரோடு நான்குவழிச் சாலையில் அதங்கோடு பகுதியில் ஆற்றங்கரையோரம் மடத்துவிளை நிழல் தாங்கல் அமைந்துள்ளது. தற்போது நான்குவழிச் சாலைப் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், அதங்கோடு சாலைப் பாலம் முதல் ஆற்றங்கரை வரையிலான சுமாா் 100 மீ தூரம் அணுகுசாலை அகற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக 61 ஆண்டுகளாக வழிபாடுகள் நடைபெற்று வரும் நிழல் தாங்கல், அதையொட்டியுள்ள வீடுகளுக்கு செல்ல பாதை இல்லாமல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுக்கு புகாா்கள் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
இதையடுத்து, பாதை கோரி மக்கள் நான்குவழிச் சாலைப் பணிக்கு பொருள்கள் ஏற்றிச் சென்ற லாரியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளதாகவும், உரிய தீா்வு கிடைக்க தாமதமானால் தொடா் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் மக்கள் தெரிவித்தனா்.