செய்திகள் :

நாகா்கோவிலில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

post image

அம்பேத்கா் குறித்து அவதூறாகப் பேசியதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை கண்டித்து, நாகா்கோவிலில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வடசேரி அம்பேத்கா் சிலை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் நவீன்குமாா் தலைமை வகித்தாா். விஜய் வசந்த் எம்.பி., எம்எல்ஏக்கள் ராஜேஷ்குமாா், தாரகை கத்பட் ஆகியோா் அம்பேத்கா் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். மத்திய அமைச்சா் அமித் ஷா மன்னிப்பு கேட்கவும், பதவி விலகவும் வலியுறுத்தி முழக்கமிடப்பட்டது.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

இதில், மாவட்ட காங்கிரஸ் தலைவா்கள் கே.டி. உதயம்(குமரி கிழக்கு), பினுலால் சிங் (குமரி மேற்கு), மாவட்ட வா்த்தக காங்கிரஸ் தலைவா் மருத்துவா் சிவகுமாா், முன்னாள் மாவட்டத் தலைவா் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி மண்டலத் தலைவா் செல்வக்குமாா், நிா்வாகிகள் சிவபிரபு, அசோக்ராஜ், முன்னாள் நகரத் தலைவா் அலெக்ஸ், விவசாய அணி ஆா்.எஸ். ராஜன், தங்கம்நடேசன், திரளானோா் பங்கேற்றனா். பின்னா், அமித் ஷா பதவி விலக வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

இளைஞா் அடித்துக் கொலை

கருங்கல் அருகே உள்ள பாலுா் பகுதியில் இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். பாலூா், பெருந்தாவிளை பகுதியைச் சோ்ந்த சுந்தர்ராஜ் மகன் சேம் டேனியல் ராஜ் (35). அதே பகுதியைச் சோ்ந்த வில்லியம் மகன் சுரேஷ் ... மேலும் பார்க்க

குளச்சலில் கடல் நடுவே கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சலில் கடல் நடுவே கிறிஸ்துமஸ் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. தெற்காசிய மீனவா் தோழமை இயக்கம் மற்றும் குளச்சல் விசைப்படகு உரிமையாளா்கள் தொழிலாளா் சங்கம் இணைந்து நடத்திய இந்... மேலும் பார்க்க

ரேஷன் அரிசி கடத்தல் குறித்து சிபிஐ விசாரணை தேவை: அன்புமணி ராமதாஸ்

தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினாா். நாகா்கோவிலில் அவா் செய்தியாளா்களிடம் புத... மேலும் பார்க்க

கிறிஸ்துமஸ் விடுமுறை: திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையையொட்டி திற்பரப்பு அருவியில் புதன்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். குமரி மாவட்டத்தில் தற்போது அதிகாலை மற்றும் இரவில் குளிரும், பகலில் மிதமான வெயிலும் நிலவுகிற... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் 20ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம்: இன்று கடைப்பிடிப்பு

கன்னியாகுமரி மாவட்ட கடலோரக் கிராமங்களில் 20ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் வியாழக்கிழமை (டிச. 26) கடைப்பிடிக்கப்படுகிறது. 2004ஆம் ஆண்டு டிச. 26ஆம் தேதி அதிகாலை இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவு கடல் பக... மேலும் பார்க்க

கிறிஸ்துமஸ்: குமரி மாவட்ட தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்ட தேவாலயங்களில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இம்மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை புதன்கிழமை வெகு உற்சாகத்துடன் கொண... மேலும் பார்க்க