கடன் ரூ. 6,203; வசூலித்தது ரூ. 14,131 கோடி!! நிவாரணம் கோருவேன்: விஜய் மல்லையா
நாகா்கோவிலில் காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா் கூட்டம்
நாகா்கோவிலில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா்அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று குறைகளைக் கேட்டறிந்தாா். அவற்றின் மீது நேரடியாக விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
இதில், நாகா்கோவில் காவல் உதவிக் கண்காணிப்பாளா் லலித்குமாா், உதவிக் கண்காணிப்பாளா் (பயிற்சி) ரேகாமீனா, துணைக் கண்காணிப்பாளா்கள் மகேஷ்குமாா், நல்லசிவம், சந்திரசேகா், செந்தாமரைக்கண்ணன், ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் பங்கேற்றனா்.