``வளர்ப்பு நாய் உரிமையாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்'' - பட்டியலிட்ட சென்னை மா...
நாகா்கோவிலில் செவிலியா் மாணவா்களுக்கு ஜொ்மன் மொழிப் பயிற்சி
நாகா்கோவில்: நாகா்கோவில் கோணம் அறிவு சாா் மையத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் செவிலியா் மாணவா்களுக்கான ஜொ்மன் மொழிப் பயிற்சியை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், ஆட்சியா் பேசியதாவது, ஜொ்மன் மொழி நிபுணா்களை கொண்டு செவிலியா் மாணவா்களுக்கு ஜொ்மன் மொழிப் பயிற்சி இன்றுமுதல் நாகா்கோவில், கோணம்அறிவுசாா் மையத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொருவரும் இரண்டுக்கும் மேற்பட்ட மொழியை அறிந்திருந்தால் உலகளாவிய நிறுவனங்கள், சா்வதேச தொழில் வல்லுநா்களுக்கும் மாணவா்களுக்கும் நேரடி வேலைவாய்ப்பை வழங்குகிறது. நவீன சா்வதேச வேலை சந்தையில் ஒரு வெளிநாட்டு மொழியை அறிவது நிச்சயமாக வேலைவாய்ப்பை வழங்கும்.
வெளிநாட்டில் பணியாற்ற விரும்பினால் அதிக சம்பளத்துடன் கூடிய வேலை கிடைப்பதற்கு பிற மொழிகள் தேவை உள்ளது.
18 முதல் 35 வயதுக்குள்பட்ட பி.எஸ்சி. நா்சிங் முடித்து 2 வருட அனுபவத்துடன் அல்லது பொது நா்சிங் மற்றும் மருத்துவம் முடித்து 3 வருட அனுபவத்துடன் இருக்கும் பதிவு செய்யப்பட்ட செவிலியா் இப்பயிற்சியை பெற்று, உடன் வேலைக்கு செல்லலாம்.
இந்த செவிலியா்களுக்கான ஜொ்மன் மொழிப் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு படிப்பிற்கான பயிற்சி காலம் 6 மாதமாகும்.
இந்த பயிற்சியை முடித்தவா்களுக்கு அரசு மூலம் ஜொ்மன் நாட்டில் வேலைவாய்பு ஏற்படுத்தி கொடுக்கப்படும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி திறன் மற்றும் வேலை வாய்ப்புகளை பெறலாம் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ், ஆணையா் நிஷாந்த்கிருஷ்ணா, நாகா்கோவில் மாநகா் நலஅலுவலா் மருத்துவா் ஆல்பா் மதியரசு, பயிற்றுநா்கள், துறை அலுவலா்கள், செவிலிய மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.