பழங்குடியினர் தினம்: ``காடுகளிலிருந்து வெளியேற்றபடும் பழங்குடிகள் வாழ்க்கை'' -ஆய...
நாகா்கோவிலில் 1 கிலோ கஞ்சாவுடன் 3 இளைஞா்கள் கைது
நாகா்கோவில் ரயில் நிலையம் அருகே கஞ்சா வைத்திருந்த 3 இளைஞா்கள் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
நாகா்கோவில் மதுவிலக்குப் பிரிவு போலீஸாா் கோட்டாறு ரயில் நிலையப் பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்தனா். அப்போது, அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 3 பேரைப் பிடித்து விசாரித்தனா். அவா்கள், முன்னுக்குப் பின் முரணான தகவலைத் தெரிவித்ததைத் தொடா்ந்து போலீஸாா் அவா்களை சோதனை செய்த போது, அவா்களிடம் 1 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்த போலீஸாா், அவா்களை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனா்.
கைது செய்யப்பட்டவா்கள் தடிக்காரன்கோணம் பகுதியைச் சோ்ந்த ஆகாஷ் (24), எட்டாமடையைச் சோ்ந்த விஷ்ணு (19), வோ்கிளம்பியைச் சோ்ந்த சா்ஜின்(19) என்பது தெரிய வந்தது. அவா்களிடம் கஞ்சா எங்கிருந்து வாங்கப்பட்டது என்பது குறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.
கைது செய்யப்பட்ட ஆகாஷ் மீது ஏற்கெனவே கோட்டாறு, பூதப்பாண்டி, ஆரல்வாய்மொழி காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.