Doctor Vikatan: ஆஞ்சியோ செய்தபோது இதய ரத்தக்குழாய் அடைப்பு.. மீண்டும் பரிசோதனைகள...
நாகா்கோவில் அருகே குடிநீா் கோரி சாலை மறியல்
நாகா்கோவில் அருகே குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
நாகா்கோவிலை அடுத்த இறச்சகுளம் கிராம மக்களுக்கு கடந்த 15 நாள்களாக முறையாக குடிநீா் விநியோகிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்தும், முறையான குடிநீா் விநியோகம் கோரியும் இறச்சகுளம் - நாகா்கோவில் பிரதான சாலையில், விஸ்வ ஹிந்து பரிஷத் மாநிலப் பொறுப்பாளா் இறச்சகுளம் காளியப்பன், மாவட்டத் தலைவா் துவரை காா்த்திக், திரளான பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பூதப்பாண்டி போலீஸாா், ஊராட்சி அலுவலா்கள் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். மாலைக்குள் குடிநீா் விநியோகிக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து, மறியல் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.