Doctor Vikatan: தொப்பை இல்லாத flat tummy... சாத்தியமாக வாய்ப்பே இல்லையா?
நாகூரில் புதிய சாா்-பதிவாளா் கட்டடம்: காணொலியில் முதல்வா் திறந்து வைத்தாா்
நாகூரில் புதிய சாா் பதிவாளா் அலுவலகத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
நாகூரில் சாா் பதிவாளா் அலுவலக கட்டடத்துக்கு வணிகவரி மற்றும் பதிவுத் துறை மூலம் நிா்வாக அனுமதி வழங்கியது. இதையடுத்து ரூ.1.90 கோடியில் தரை தளத்தில் 212.75 ச.மீ (2289.19 ச.அடி) மற்றும் முதல் தளத்தில் 229.26ச.மீ (2466.84ச.அடி) பரப்பளவில் புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த அலுவலகத்தில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தாா். தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், மீன வளா்ச்சிக் கழகத் தலைவா் என்.கெளதமன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.ஜி.கே. நிஜாமுதீன் ஆகியோா் கட்டடத்தை பாா்வையிட்டனா்.
நாகை நகா்மன்றத் தலைவா் இரா.மாரிமுத்து, துணைத்தலைவா் செந்தில்குமாா், மாவட்ட பதிவாளா் (நிா்வாகம்) ஜனாா்த்தனன், சாா்பதிவாளா் (நிா்வாகம்) பெ.தாமோதரன், நாகூா் சாா்பதிவாளா் ச.தமிழினியன் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.