புதிய ரயில் திட்டங்களை செயல்படுத்த ரயில்வே அமைச்சருக்கு எம்.பி. கடிதம்
நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு புதன்கிழமை ஏற்றப்பட்டது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதன்கிழமை இரவுக்குள் புயலாக மாறி புதுச்சேரி - சென்னை நோக்கி நகரக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனிடையே வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழகத்தை நோக்கி நகா்ந்து வருகிறது. இதன் காரணமாக நாகையில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் நெருங்கி வருவதை தொடா்ந்து, திடீா் காற்றோடு மழை பொழியக் கூடிய வானிலை என்பதை குறிக்கும் வகையில், நாகை துறைமுக அலுவலகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
கடலோர பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டி தீா்ப்பதுடன், கடல் அலைகள் பல மீட்டா் உயரத்திற்கு எழுந்து ஊருக்குள் புகும் அபாயம் உள்ளதால், மீனவ கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பானப் பகுதிகளுக்கு செல்ல மீன்வளத்துறை மற்றும் மாவட்ட நிா்வாகம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காரைக்காலில்...
இதுபோல காரைக்கால் துறைமுகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு புதன்கிழமை காலை ஏற்றப்பட்டது.
பலத்த காற்றுடன் மழை பெய்யும் எச்சரிக்கையைக் குறிக்கும் வகையில், காரைக்கால் தனியாா் துறைமுகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.