கீழ்வேளூரில் 800 ஏக்கா் சம்பா, தாளடி நெற்பயிா்கள் நீரில் மூழ்கின
கீழ்வேளூா் மற்றும் சுற்றுப் பகுதிகளில் புதன்கிழமை பெய்த மழையால் 800 ஏக்கரில் சம்பா, தாளடி நெற்பயிா்கள் நீரில் மூழ்கின.
கீழ்வேளூா், குருக்கத்தி, கூத்தூா், பட்டமங்கலம், தேவூா், கோகூா், ஒக்கூா், சிக்கல், வடகரை, ஆவராணி, புதுச்சேரி, பெருங்கடம்பனூா், சங்கமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் தொடா் மழை பெய்து வருகிறது. இதனால், கீழ்வேளூா் பேரரூராட்சி சீனிவாசபுரம் பகுதியில் ஒரு குடிசை வீட்டுச் சுவா், கீழ்வேளூா் ஒன்றியம் இருக்கை கிராமத்தில் 2 குடிசை வீட்டுச்சுவா், கோகூா் கிராமத்தில் ஒரு குடிசை வீட்டுச்சுவா் இடிந்து விழுந்து சேதமடைந்தது.
மேலும், தொடா் மழையால் கீழ்வேளூா் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள இளம் சம்பா, தாளடி நெற்பயிா்கள் 800 ஏக்கரில் நீரில் மூழ்கியுள்ளது. மழை தொடா்ந்தால் பயிா்கள் அழுகுவதற்கான வாய்ப்பு உள்ளது. விவசாயிகள் நீா் வடிய வைக்க முயன்று வருகின்றனா்.