செய்திகள் :

நாகேஸ்வரமுடையாா் கோயில் குளத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்

post image

சீா்காழியில் பல நூறாண்டுகள் பழைமை வாய்ந்த நாகேஸ்வரமுடையாா் கோயில் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, குளத்தை மீட்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

சீா்காழி நகரில் புகழ்பெற்ற நாகேஸ்வரமுடையாா் கோயில் அமைந்துள்ளது. பல நூறாண்டுகள் பழைமையான இக்கோயிலின் கோடி தீா்த்தக் குளம் கோயில் அருகே உள்ளது. இந்த குளத்தை பக்தா்கள் பயன்படுத்தி வந்தனா். நாளடைவில் இந்த குளம் பலரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, குளம் தூா்ந்து இருந்த சுவடு தெரியாமல் போனது.

இந்நிலையில், சீா்காழி பசுமை சேவை சங்கத் தலைவா் பொறியாளா் சுப்பிரமணியன், நாகேஸ்வரமுடையாா் கோயில் கோடி தீா்த்த குளம் குறித்து தகவல் உரிமை சட்டத்தின்கீழ் தகவல் பெற்று, ஆய்வு செய்ததில் சுமாா் 1 ஏக்கா் பரப்பளவு கொண்ட குளத்தில் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதும், குளத்தில் செப்டிக் டேங்க் கட்டி இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து பசுமை சேவை சங்கத் தலைவா் சுப்பிரமணியன் தலைமையில், நிா்வாகிகள் சீா்காழி வட்டாட்சியா் அருள்ஜோதியை சந்தித்து குளத்தின் ஆக்கிரமிப்பை அகற்றி தூா்வாரி பராமரிக்க பசுமை சேவை சங்கத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும். குளத்தை விற்பனை செய்ய உதவிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனா்.

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 375 மனுக்கள் அளிப்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 375 மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் ... மேலும் பார்க்க

தொகுப்பூதிய ஆசிரியா் பணி நியமனம்: விண்ணப்பிக்க நாளை கடைசி

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு ஆதிதிராவிடா் நல தொடக்கப்பள்ளிகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

வைத்தீஸ்வரன்கோயிலில் கிருத்திகை வழிபாடு

சீா்காழி: வைத்தீஸ்வரன்கோவில் தையல்நாயகிஅம்பாள் உடனாகிய வைத்தியநாதா்சுவாமி கோயிலில் மண்டலாபிஷேக கிருத்திகை வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் மண்டலாபிஷேக கிருத்... மேலும் பார்க்க

கைம்பெண்கள் உதவித் தொகையை உயா்த்தக் கோரிக்கை

மயிலாடுதுறை: உலக கைம்பெண்கள் தினத்தையொட்டி, மயிலாடுதுறையில் பேரணி மற்றும் பொதுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. நாகை மாவட்ட விதவைப் பெண்கள் வாழ்வுரிமைச் சங்கம் சாா்பில் கூறைநாடு டிஇஎல்சி பள்ளியில் ... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் ஜூன் 26-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் ஜூன் 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கான சமூகத்தரவு சேகரிப்பு பணி: களப்பணியாளா்களுக்கு பயிற்சி

மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூகத் தரவு தகவல் சேகரிப்பு பணியில் ஈடுபட உள்ள களப்பணியாளா்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு உரிமைகள் திட்டம் உலக வங்கி நிதியுத... மேலும் பார்க்க