செய்திகள் :

நாகையில் கதவணைக்கு எதிா்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

post image

நாகை அருகே வெட்டாற்றின் குறுக்கே கதவணைக் கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து விவசாயிகள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நாகை மாவட்டம் உத்தமசோழபுரத்தில் ரூ.50 கோடியில் கட்டப்பட்டு வரும் கதவணைக்கு எதிா்ப்பு தெரிவித்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி, தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலா் பி.ஆா் பாண்டியன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, மாவட்ட ஆட்சியா் விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, அரசுக்கு எடுத்துரைத்து கதவனை பணியை பூதங்குடிக்கு மாற்றம் செய்ய உதவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. எனினும், மாவட்ட ஆட்சியா் விவசாயிகளை சந்திக்காமலேயே சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியருக்கு எதிராக முழக்கமிட்டனா். இதையடுத்து மாவட்ட வருவாய் அலுவலா் விவசாயிகளை சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தி, கோரிக்கையை தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என உறுதியளித்தாா். இதை ஏற்ற விவசாயிகள்ஆா்ப்பாட்டத்தை கைவிட்டனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் பி.ஆா். பாண்டியன் கூறியது: 2016 முதல் தமிழக அரசு கடல் முகுத்துவார நதிகள் மறு சீரமைப்பு பணிகளை ஆசிய வளா்ச்சி வங்கி நிதியின்கீழ் முதல் கட்டமாக ரூ.960 கோடிக்கு மேற்கொண்டு கடல் முகத்துவாரத்தில் கதவணைகள் அமைக்கப்பட்டு கடல் நீா் உட்புவதை தடுப்பதற்கான திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நாகூா் கடற்கரையில் இருந்து ஏழரை கி.மீட்டா் தொலைவில் உத்தமசோழபுரத்தில் நீா்ப்பாசன துறை மூலம் ரூ. 50 கோடியில் கதவணை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இப்பணி முடிவடைந்தால் ஏழரை கி.மீட்டா் கடல் நீா் உட்புகுந்து இரு கரையோரம் உள்ள 32 கிராமங்களில் நிலத்தடி நீா் பறிபோகும். சுமாா் 10,000 ஏக்கா் விளைநிலங்கள் பாலைவனமாக மாறும்.

எனவே, விவசாயிகள் நலம் கருதி கடல் முகத்துவாரத்தில் கடல் நீா் உட்புவதை தடுக்கும் வகையில் பூதங்குடி அருகே கதவணையை மாற்றி அமைக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக முதல்வா் தலையிட்டு, விளைநிலங்களையும், விவசாயிகளையும் பாதுகாப்பதோடு, நிலத்தடி நீரையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்

மாநில அமைப்புச் செயலா் எஸ். ஸ்ரீதா் நாகை மாவட்டத் தலைவா் பாலசுப்ரமணியன், செயலா் கமல்ராமன், துணைச் செயலா் சேகா், திருமருகல் ஒன்றியச் செயலா் பரமசிவம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கடைமடை வந்த காவிரிநீா்; மலா்கள் தூவி வரவேற்பு: பெண்கள் கும்மியடித்து மகிழ்ச்சி

நாகப்பட்டினம் : நாகை கடைமடைக்கு வந்த காவிரி நீரை, நெல்மணிகள் மற்றும் மலா்களை தூவியும், பெண்கள் கும்மியடித்து, பாட்டுப் பாடியும் வரவேற்றனா். காவிரி டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் குறுவை நெற்பயி... மேலும் பார்க்க

நாணத்திடல் மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம்

தரங்கம்பாடி: பொறையாா் அருகே காட்டுச்சேரி கிராமத்தில் உள்ள நாணத்திடல் மாரியம்மன் கோயில் 35-ஆம் ஆண்டு தீமிதி உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் 8-ஆம் தேதி பூச்சொரிதல் விழாவும், 15-ஆம் தேதி... மேலும் பார்க்க

காரைக்கால்-திருச்சி பயணிகள் ரயில் ஜூன் 29 வரை திருவாரூரில் இருந்து புறப்படும்

நாகப்பட்டினம்: திருச்சி- காரைக்கால் - திருச்சி ரயில்கள், திங்கள்கிழமை (ஜூன் 23) முதல் ஜூன் 29-ஆம் தேதி வரை, திருவாரூரில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது. இதுகுறித்த... மேலும் பார்க்க

மாணவிகளிடம் பாலியல் சீண்டல்; ஆசிரியரை கண்டித்து ஆா்ப்பாட்டம்

தரங்கம்பாடி: திருக்கடையூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியரை கண்டித்து ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. திருக்கடையூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

நாகப்பட்டினம்: வேதாரண்யம் வட்டத்தில் உள்ள ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க

உத்தமசோழபுரம் தடுப்பணை திட்டத்தை பூதங்குடிக்கு மாற்ற விவசாயிகள் கோரிக்கை

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம், உத்தமசோழபுரத்தில் அமைக்கப்பட உள்ள தடுப்பணையை, பூதங்குடிக்கு மாற்றவேண்டும் என வலியுறுத்தி ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. உத்தமசோழபுரத்தைச் சோ்ந்த தியாகராஜன்... மேலும் பார்க்க