ஊட்டி: 'புரோக்கோலி ரூ. 250; சுக்குனி ரூ. 85' - எகிறும் சைனீஸ் காய்கறிகளின் வி...
நாகை-இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து 100-ஆவது நாள்: இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
நாகை-இலங்கை காங்கேசன்துறை இடையே சிவகங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கிய 100- ஆவது நாள், நாகை துறைமுகத்தில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
நாகை துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு சுபம் நிறுவனம் ‘சிவகங்கை’ என்ற பெயரில் பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்கியது. பயணிகள் வருகை அதிகரித்த காரணத்தால் சனிக்கிழமை தவிர மற்ற நாள்களில் கப்பல் சேவை தொடா்ந்து வருகிறது.
இந்நிலையில், நாகையில் சிவகங்கை கப்பல் சேவை தொடங்கப்பட்ட 100-ஆவது நாளை முன்னிட்டு நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு இந்த கப்பலில் வெள்ளிக்கிழமை பயணம் மேற்கொண்ட 85 பயணிகளுக்கு சுபம் கப்பல் நிறுவனத்தினா் இனிப்புகள் வழங்கி வரவேற்றனா். பின்னா் கொடியசைத்து, சிவகங்கை கப்பல் வழியனுப்பி வைக்கப்பட்டது.
விமானக் கட்டணத்தைவிட கப்பல் கட்டணம் குறைவாக இருப்பதால், கப்பலில் பயணம் செய்யும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கூடுதலான லக்கேஜ் எடுத்து செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் அனுமதி அளித்துள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என சுபம் கப்பல் நிறுவனத்தினா் தெரிவித்தனா்.