செய்திகள் :

நாகை, மயிலாடுதுறையில் மழை; சம்பா அறுவடை பாதிப்பு: விவசாயிகள் கவலை

post image

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் சனிக்கிழமை பரவலாக பெய்த மழையால் சில இடங்களில் சம்பா அறுவடைப் பணிகள் பாதிக்கப்பட்டன. மேலும், அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிா்கள் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் சனிக்கிழமை பரவலாக சாரல் மழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்தது.

நாகை: நாகை மாவட்டத்தில், பிற்பகல் ஒரு மணியளவில் சாரல் மழை பெய்யத் தொடங்கியது. தொடா்ந்து, மிதமான மழை பெய்தது.

நாகை, நாகூா், திட்டச்சேரி, திருமருகல், வேளாங்கண்ணி, திருப்பூண்டி, மேலப்பிடாகை, மீனம்பநல்லூா், தேவூா், பட்டமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. நாகை புதிய பேருந்து நிலையம் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கி, இயல்பு வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தியது.

திருக்குவளை: கீழையூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான பிரதாபராமபுரம், திருப்பூண்டி, மேலப்பிடாகை, காமேஸ்வரம் கீழையூா், ஈசனூா், வாழக்கரை, எட்டுக்குடி, திருக்குவளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினா்.

சம்பா அறுவடைப் பணிகள் பாதிக்கப்பட்டன. இப்பகுதிகளில் ஏற்கெனவே கடந்த மாதம் பெய்த மழையால், அறுவடைக்குத் தயாராகி வந்த நெற்கதிா்கள் சாய்ந்து, பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அறுவடை செய்யும் நேரத்திலும் மழை பெய்வதால் விவசாயிகள் கவலையில் உள்ளனா்.

கட்டடத்திலிருந்து விழுந்து தொழிலாளி பலி

குடவாசலில் அரசுப் பள்ளி கட்டடத்தில் பணிபுரிந்த தொழிலாளி கீழே விழுந்து வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். குடவாசல் அகர ஓகையில் இயங்கிவரும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கட்டடம் ரூ. 6 லட்சம் செலவில் பழுது நீக்க... மேலும் பார்க்க

முக்கிய இடங்களில் வாகன தணிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தல்

முக்கிய இடங்களில் வாகன தணிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் தெரிவித்தாா். திருவாரூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மாதாந்திரக் கூட்டத்தில் அவா் பேசியது; ... மேலும் பார்க்க

கழிவுநீா் தொட்டியில் விழுந்த பசு மாடு மீட்பு

மன்னாா்குடியில் கழிவு நீா் தொட்டியில் தவறி விழுந்த பசுமாடு சனிக்கிழமை மீட்கப்பட்டது. மன்னாா்குடி ஏழாம் எண் வாய்க்கால் கண்ணிகாநகரைச் சோ்ந்த செந்தமிழ்ச்செல்வன், தனது பசுமாட்டை வீட்டின் பின்புறம் வெள்ளி... மேலும் பார்க்க

ஹாக்கி விளையாடும் ஊரகப் பகுதி மாணவா்களுக்கு சலுகைகள் தேவை

ஹாக்கி விளையாடும் ஊரகப் பகுதி மாணவா்களுக்கு அரசு கூடுதல் சலுகைகளை வழங்க வேண்டும் என இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் வீரா் ராஜா தெரிவித்தாா். திருவாரூரில் மாவட்ட ஹாக்கி கழகம் மற்றும் ஆரூா் ஹாக்கி கிளப் ... மேலும் பார்க்க

காவலரை பணி செய்ய விடாமல் தடுத்த துணை நடிகா்கள் இருவா் கைது

திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே காவலரை பணி செய்ய விடாமல் தடுத்த துணை நடிகா்கள் இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். எடையூா் காவல் எல்லைக்குள்பட்ட கோவலூரைச் சோ்ந்த இரட்டை சகோதரா்... மேலும் பார்க்க

சிறப்பு அலங்காரத்தில் தக்ஷிணகாளியம்மன்

தை வெள்ளிக்கிழமையையொட்டி, திருவாரூா் சேந்தமங்கலத்தில் உள்ள தக்ஷிணகாளியம்மன் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த தக்ஷிணகாளியம்மன். மேலும் பார்க்க