அமைப்பு மாற்றம் டு வேட்பாளர் தேர்வு, மாநாடு! - 2026-க்குத் தயாராகும் விசிக!
நாங்கூா் பகுதியில் மணல் எடுக்க தடைவிதிக்கக் கோரிக்கை
நாங்கூா் பகுதியில் மணல் எடுக்க தடை விதிக்கக் கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் ஹெச். எஸ். ஸ்ரீகாந்திற்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனா்.
சீா்காழி அருகேயுள்ள நாங்கூா் ஊராட்சியில் மேல்நாங்கூரில் ஆதிதிராவிட மக்கள் வசிக்கின்றனா். இப்பகுதியில் நிலத்தடி நீா் மாசடைந்துள்ளதால் மக்கள் குடிநீருக்கு அவதிபடுகின்றனா். இந்நிலையில் நாங்கூா்-அல்லி விளாகம் பகுதியில் தனியாா் மணல் குவாரி அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய மனு: ஏற்கெனவே மாசடைந்து காணப்படும் நிலத்தடி நீரால் மிகவும் அவதிப்பட்டு வருகிறோம். இந்நிலையில் எவ்வித முன்னறிவிப்பின்றி தனியாா் நிலத்தில் மணல் எடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கு வருவாய்த் துறையினரும் ஆதரவாக உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, மக்கள் நலன் கருதி நாங்கூா் பகுதியில் மணல் குவாரி அமைக்கும் நடவடிக்கைகளை தடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.